நாம் செய்யும் தர்ப்பணம் முன்னோரை சென்றடையுமா?

முன்னோருக்காக, நாம் செய்யும் திதி, தர்ப்பணம் போன்றவை அவர்களை சென்றடையுமா? இங்கு நாம் கொடுக்கும், எள்ளும் தண்ணீரும், எப்படி, அவர்களை சென்று சேரும். அவர்கள் மறு பிறவி எடுத்திருப்பார்கள்.

அப்போது, எப்படி அது அவர்களை சென்றடையும் என்ற சந்தேகம், நம் பலரது மனதில் ஏற்படலாம்
இதற்கு காஞ்சி மஹா பெரியவர் தந்துள்ள விளக்கம் மிக அருமை.

நாம்,  பணத்தை, மணியார்டர் மூலம் அனுப்புகிறோம். அதற்காக தபால் அலுவலகத்துக்கு சென்று பணம் அனுப்புகிறோம். நாம் கொடுத்து பணத்தை வாங்கி, தபால் அதிகாரி, தன் பெட்டியில் போட்டுக் கொள்கிறார்.

தபால் அதிகாரியிடம் நாம் கொடுத்த பணம், நாம் அனுப்பியவருக்கு போய் செருக்கிறது. அவர் வெளிநாடுகளில் இருந்தால், அந்த நாட்டுக்கான ரூபாயாக மாறி சேருகிறது.

நாம், தபால் அதிகாரியிடம், ஐந்து நுாறு ரூபாய் கொடுத்து, 500 ரூபாய் அனுப்புவோம். ஆனால், நாம் அனுப்பியவருக்கு அது, 500  ரூபாய் நோட்டாகவோ, 50 ரூபாய் நோட்டுகளாகவோ போய் சேர வாய்ப்பு உள்ளது.

அதுபோல்தான், திதி, தர்ப்பணம் கொடுத்தால், நாம் யாரை நினைத்து கொடுக்கிறோமோ,. அவரை சென்றடையும். அவர் மாடாக பிறந்திருந்தால், நாம் கொடுத்த தர்ப்பணம், வைகோலாக மாறி அவரை சேரும். ஆடாக பிறந்திருந்தால், இழை தழைகளாக போய் சேரும்.

Sharing is caring!