நாய்கடி விஷத்தை போக்கும் செடி

நாயுருவி அல்லது அபமார்க்கி, ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இதன் நெற்று விலங்குகளின் மேல் ஒட்டிச் சென்று வேறு இடங்களில் பரவும்.

நாயுருவி செடிக்கும், நாய்க்கும் நிறைய தொடர்பு உண்டு. இம்மூலிகை நாய்க்கடி விஷத்தை முறிக்கக் கூடியது. இம்மூலிகைக்கு நாய் வணங்கி என்றொரு பெயரும் உண்டு.

இலையின் பசை விஷ பூச்சிக் கடிக்கு மருந்தாகிறது. நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசி வர காயம் விரைவில் ஆறிவிடும்.

மூலக்கட்டிகளுக்கு வேரின் பொடியை தேனுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. அரிசி கஞ்சியில் சேர்க்கப்பட்ட விதைகள் மூல நோய் இரத்தப் போக்கிற்கு மருந்தாகிறது.

வேரின் கசாயம் வயிற்றுப் போக்கினை தடுக்கிறது. வேரின் பசை கருச்சிதைப்பிற்குப்பின் ஏற்படும் ரத்தப் போக்கினை நிறுத்தும்.முழுத்தாவரத்தின் கசாயம் சிறுநீர்ப்போக்கினை தூண்டுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது.

பற்களில் படியும் தொற்றுக்களை அழிக்கும் தன்மைமிக்கது.

Sharing is caring!