நிம்மதியைத் தேடி ஓட வேண்டியதில்லை…..!

நிம்மதியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். கோவிலோ… தியானமோ… இயற்கை எழில் சூழ்ந்த இடமோ எங்கே போனால் மனம் அமைதியடையும். சந் தோஷமடையும் இப்படி எதிர் பார்த்து ஓடி ஓடி இருக்கும் நிம்மதியை தொலைத்து விட்டு நிற்கிறோம்.  வழிகாட்ட இறைவன் முன் நிற்கும்போதே அவசரத்தில் வணங்கி அலைபாயுகிறோம். இதை விளக்கும் கதை ஒன்று பார்க்கலாமா?

ஆலயங்களின் முன்பு கையேந்தி நிற்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.  பழைய புராதன கோயில் ஒன்று   இருந்தது.  போக்குவரத்து அதிகம் இல்லாத இடம் என்பதால் அங்கு வருபவர்களது கூட்டமும் குறைவாக இருக்கும். ஆனால் அங்கும் ஒருவன் நீண்ட காலமாக பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான்.  யாரிட மும் வாய்திறந்து பேசமாட்டான். தினமும் காலையில் அங்கு வந்துவிடுவான். கையை மட்டும் நீட்டுவான். யாராவது அந்த கோவிலுக்கு வரும்போது  பிச்சை போட்டால் தான் உண்டு.  கோவிலுக்கு வருபவர்கள் யாராவது உணவு பொட்ட லங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடுவான். இப்படியே பொழுதை கழித்தான்.

அந்தக் கோவிலின் விசேஷ காலத்திற்கு பிச்சையெடுக்க வரும் கூட்டம்  இங்கிருந்த பிச்சைக்காரனை  அவர்களோடு அழைத்தார்கள். ”இங்கு தான் உணவும் இல்லை. வருமானமும் இல்லையே  எதற்கு இங்கே இருக்கிறாய்?” என் றார்கள். அப்படியும் அவன் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தான். வருடக்கணக்கில் வரும்போதெல்லாம்  அவர்கள் சொல்வதும் இவன் அமைதி யாக இருப்பதுமே  தொடர்ந்தது. வருடங்கள் ஓடியது.

திடீரென்று ஒரு நாள் அவன்  அந்தக் கோவிலின் வாசலிலேயே இறந்துவிட்டான். ஐயோ பாவம் யாருமில்லாமல் இப்படி  தனியாக இறந்துகிடக்கிறானே  என்று பரிதாபப்பட்டார்கள். அமைதியாக  இருந்தவனாயிற்றே நாமே அடக்கம் செய்ய லாம் என்று  அடக்கம் செய்தார்கள். அவன் இருக்கும் இடத்தை தோண்டும் போது  இரண்டு அடிக்குள் உள்ளே டங் டங் என்று சத்தம் கேட்டது. அவசரமாக அந்த இடத்தை ஆராய்ந்தார்கள். செப்புக்குடம் ஒன்று இருந்தது.  அதை வெளியே எடுத்து பார்த்தால் குடம் நிறைய தங்கக்காசு இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரிய மாகிவிட்டது.

தன் காலுக்கு அடியிலேயே புதையல் இருந்தது தெரியாமல்   வருபவர்களிடம் பிச்சையெடுத்து வாழ்ந்தானே என்று பேசிக்கொண்டார்கள். இப்படித்தான் ஒவ் வொரு மனிதனும் தன் மனதுக்குள்ளேயே இருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும், இறைவனையும் புரிந்துகொள்ளாமல்  அது வெளியே இருக்கிறது என்று தேடி அலைகிறார்கள்.  வாழ்நாள் முழுக்க தேடிக்கொண்டே இருப்பதால் இருக்கும் இன்பத்தை அனுபவிக்காமலேயே மடிந்தும் விடுகிறார்கள்.

Sharing is caring!