நீங்கள் தினமும் ஒட்ஸ் சாப்பிடுபவரா?

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பலர் காலை உணவாக சாப்பிடுவது ஓட்ஸைத் தான். ஒரு நாளைக்குத் தேவையான அளவு மாங்கனீசு ஓட்ஸில் இருந்து, 100 சதவீதம் கிடைக்கும்.

ஓட்ஸில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஈ, செலினியம், பீனோலிக் அமிலங்கள், பைட்டிக் அமிலம் போன்றவை உள்ளது. மற்ற ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி1, காப்பர், பயோடின், மக்னீசியம், மாலிப்தீனம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன.

நன்மைகள்

புரோட்டீன் அதிகரிக்கும்

8 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில் அன்றாடம் தேவையான புரோட்டீனில் 15 சதவீதம் கிடைக்கும்.

ஓட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் க்ளுட்டமைன் போன்றவை தசை நார்களை வேகமாக உருவாக்க உதவும்.

ஒரு கப் ஓட்ஸில் 3.4 மிகி இரும்புச்சத்து, 0.9 மிகி வைட்டமின் பி3 போன்றவை உள்ளது. இரும்புச்சத்து ஆக்ஸிஜனை இரத்தத்தின் வழியே கொண்டு செல்ல உதவுகிறது.

இதில் உள்ள பி வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டை ஆற்றலா மாற்ற உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஓட்ஸில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள், அரிப்பு, அழற்சி மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுக்கன், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

அதிலும் ஓட்ஸை சாப்பிடும் போது அத்துடன் ஆரஞ்சு ஜூஸைக் குடித்தால், உடலில் வைட்டமின் சி-யின் அளவு அதிகரிக்கும்.

எடை குறைய உதவும்

தினமும் ஓட்ஸை சாப்பிட்டால், அது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும் மற்றும் எடையைக் குறைக்கச் செய்யும். ஒரு பௌல் ஓட்ஸை காலை உணவின் போது சாப்பிட்டால், அது பகல் நேரத்தில் அதிகளவு கலோரி எடுப்பதைத் தடுக்கும். இதன் விளைவாக உடல் பருமன் அடைவது தடுக்கப்படும்

இதய நோயின் அபாயம் குறையும்

ஓட்ஸில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்கள், இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் இதய செல்களுக்கு ஆதரவாக இருக்கும். ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களால் இரத்தக் குழாய் சுவர்கள் பாதிப்படைவதைத் தடுக்கும்.

ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஓட்ஸில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

Sharing is caring!