நீங்கள் பிறந்த எண்களின் பலவீனங்கள் இவை தானாம்…!

இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஸ்டமானவராகக் கருதப்பட்டாலும், அதிகம் செலவழிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதனையும் மீறி அவர்கள் தொடர்ந்து செலவு செய்தால் அவர்கள் கடினமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.

பிறந்த எண் 2 :எளிதில் பதட்டமடையக் கூடியவர்களாக இருப்பார்கள். சிலசமயம் அவர்களிடம் நம்பிக்கை குறைவாக இருக்கும். சிறிய சறுக்கல்கள் கூட, அவர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்.

பிறந்த எண் 3 :தங்களின் செலவுகளை திட்டமிடுவதில் இவர்கள் எப்பொழுதும் கோட்டை விட்டுவிடுவார்கள். தன்னை விட சிறப்பாகச் செயல்படுபவர்கள் மீது இவர்களுக்கு எப்பொழுதும் பொறாமை இருக்கும்.

பிறந்த எண் 4 :4, 13, 22 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் பலவீனம் அதிக உணர்ச்சிவசப்படுவதாகும். இதனால் அவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். அதேசமயம் சிலசமயங்களில் மிகவும் பிடிவாதமாகவும் நடந்து கொள்வார்கள்.

பிறந்த எண் 5 :அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படும், இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். உடற்பயிற்சி மற்றும் உணவுமுறையில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிறந்த எண் 6 :மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள். தகுதியான நபர்களை மட்டும் நம்பும் பழக்கத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் பிரச்சினைதான்.

பிறந்த எண் 7 :மற்றவர்களின் கருத்தை பற்றிக் கவலைப்படமாட்டார்கள். இவர்கள் குறுகிய காலத்திலேயே வெற்றியை அடைந்து விடுவார்கள், இதனால் அவர்களுக்கு ஆணவம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதேசமயம் தன்னை விரும்புபவர்களை காயப்படுத்துவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

பிறந்த எண் 8 :அதிக சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். இவர்களை மற்றவர்கள் அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்வார்கள். அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

பிறந்த எண் 9 :கடினமாக உழைக்க கூடியவராக இருந்தாலும், எப்பொழுதும் இவர்களை சுற்றி எதிர்மறை சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும். மூர்க்கத்தனமும், முன்கோபமும் இவர்களிடம் அதிகமிருக்கும்.

Sharing is caring!