நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு உயிரை பறிக்கும்..!! கவனமாக இருங்கள்..!!

நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு உயிரை பறிக்கும் விஷமாக மாற காரணம் என்ன தெரியுமா? எப்படி தடுக்கலாம்?

மனிதன் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவாகும். மனிதர்களை வாழவைப்பதுதான் உணவின் வேலை ஆனால் சிலசமயம் நாம் செய்யும் தவறுகளால் அந்த உணவே விஷமாக மாறிவிடுகிறது.

அசுத்தமான உணவை சாப்பிடுவது உணவு நோய்த்தொற்று அல்லது உணவை விஷமாக மாற்றுவது உணவுப்பழக்க நோய் என்று அழைக்கப்படுகிறது.

உணவை சமைக்கும்போதோ அல்லது சேமிக்கும்போதோ அதில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தொற்றுக்கள் ஏற்படுவதே இதற்கு காரணமாகும்.

இந்த பதிவில் உணவுநோய்த்தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உணவு மாசு

உணவு மாசுபாடு என்பது அதற்கான மூலப்பொருட்களை வளர்ப்பது, அறுவடை செய்வது, சேமிப்பது அல்லது சமைப்பது போன்ற எந்த நிலையில் வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

மேலும் வெளிப்புற தூண்டுதல்களாலும் உணவில் அசுத்தம் ஏற்படலாம்.

எந்த உணவுகளில் அதிக மாசு இருக்கும்?

பொதுவாக சமையலுக்கு உட்படுத்தாத பொருட்கள்தான் அதிக அசுத்தத்திற்க்கு ஆளாகிறது.

உடனடியாக சாப்பிடக்கூடிய பொருட்களான சாண்ட்விச், சாலட் போன்ற பொருட்களில் அதிக மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.

உணவு விஷமாவதற்கான காரணங்கள்

உணவு நோய்த்தொற்றுக்கு பாக்டீரியாக்களே மிகவும் பரவலான காரணமாக உள்ளது.

அதே நேரத்தில் ஒட்டுண்ணிகளும் காரணமாக இருக்கிறது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.

பொதுவாக இது இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பாலை அதிகம் தாக்குகிறது.

இது கத்தியின், காய்கறி வெட்ட பயன்படுத்தும் பலகை மற்றும் சமைப்பவன் கை போன்றவற்றின் மூலம் பரவுகிறது.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

உணவுநோய்த்தொற்றின் அறிகுறிகள் 1 முதல் 3 நாட்கள் வரை தோன்றலாம். ஒட்டுண்ணிகள் உங்கள் செரிமான மண்டலத்தில் உங்களுக்கே தெரியாமல் பல ஆண்டுகள் வாழக்கூடும்.

கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதனால் மோசமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம்.

அதேபோல 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது ஏனெனில் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும்.

எப்படி தடுக்கலாம்?
  • கிருமிகளும், பாக்டீரியாக்களும் கைகளின் மூலம் பரவ அதிக வாய்ப்புள்ளது.
  • எனவே சாப்பிடுவதற்கு முன்னரும், சமைப்பதற்கு முன்னரும் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டியது அவசியமாகும்.
  • அதேசமயம் மீதமான உணவுகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

Sharing is caring!