நீங்க பண்ற இந்த 5 விஷயம், மனைவிய எவ்வளவு பாதிக்கும் தெரியுமா?

திருமண உறவில் ஏதோ சிக்கல் ஏற்படுவது போல தோன்றுகிறதா? நீண்ட நாட்களாக அதற்கான தீர்வு என்ன? எதனால், யாரால்? திருமண உறவில் சிக்கல் ஏற்படுகிறது என்று தெரியாமல் தவித்து வருகிறீர்களா?

மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு முன்… முதலில் நீங்கள் உங்கள் உறவில் சரியான நபராக இருந்து வருகிறீர்களா என்ற சுய பரிசோதனை செய்துக் கொண்டதுண்டா? இதற்கு நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஒருமுறை உங்கள் கண்ணாடி முன் சென்று நில்லுங்கள். நாம் இங்கே கலந்தாலோசிக்க இருக்கும் ஐந்து விஷயங்களை நீங்கள் செய்கிறீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஒருவேளை… ஆம்! என்றால்… உங்கள் உறவை சீர்குலைக்கும் கருவியே நீங்கள் தான் என்பதை அறிந்துக் கொள்ள இயலும். சில முறை தவறுகள் நம்முள்ளேயும் இருக்கக் கூடும். அதை ஒப்புக் கொண்டு மாற்றம் தேடும் மனம் மட்டுமே தேவை. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது. தவறுகள் திருத்திக் கொள்ள வாய்ப்புகள் நிச்சயம் அளிக்கப்படும்…

இல்லை!

உங்கள் துணை உங்களிடம் எதை கேட்டாலும் இல்லை என்ற பதில் தான் உங்கள் வாயில் இருந்து வருகிறதா? ஆம்! அப்போது உங்கள் இல்லற வாழ்க்கை சீர்குலைய நீங்கள் தான் காரணம். இல்லறம் என்பதே விட்டுக் கொடுத்து வாழ்வது தான். அங்கே எதை கேட்டாலும் இல்லை என்ற வார்த்தையே பதிலாக உங்களிடம் இருந்து வருகிறது என்றால், தவறு உங்கள் மீது தான். நீங்கள் தான் தொல்லையை ஏற்படுத்தும் நபராக இருக்கிறீர்கள் என்று அர்த்தன்.

ஒருவேளை துணை உங்களிடம் கேட்பது முடியாத காரியமாக இருந்தாலும் கூட, அதை நேர்மறையான வார்த்தைகள் கொண்டு பேச வேண்டியது அவசியம். முடியாது என்று கூறுவது தவறல்ல. ஆனால், எல்லா சூழலிலும் முடியாது என்று மட்டுமே கூறிக் கொண்டிருந்தாள் இல்லறம் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துவிடும்.

ரகசியங்கள்!

ரகசியங்கள் பாதுகாக்க கூடாது ஒரே உறவு கணவன் – மனைவி உறவு தான். எந்த நொடியில் நீங்கள் உங்கள் துணையிடம் இருந்து இரகசியங்கள் காக்க துவங்குகிறீர்களோ அப்போதே நீங்கள் ஏதோ தவறு செய்ய துவங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். அந்த நொடியில் இருந்தே உங்கள் உறவு தோல்வி அடைய துவங்கிவிட்டது என்று அர்த்தம்.

நீங்கள் இரகசியங்கள் காப்பது உங்கள் துணை அறிந்துவிட்டால், தானாக உங்களிடம் ஒரு பாதுகாப்பின்மையை உணர துவங்கிவிடுவார். உறவில் பாதுகாப்பின்மை உணர துவங்கிவிட்டால் சந்தேகம் வளர துவங்கிவிடும். உறவை கொள்ளும் பெரும் கருவி சந்தேகம் தான்.

மன்னிப்பு?

தவறு உங்கள் மீதாக இருந்தாலுமே மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற கர்வம் கொண்டிருந்தீர்கள் எனில். உங்கள் உறவை உங்கள் கைகளாலேயே கொலை செய்வதற்கு சமம்.

கணவன் மனைவி உறவில் ஏற்றத்தாழ்வு இருக்கவே கூடாது. முதலில் நீங்கள் செய்வது தான் தவறு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். இரண்டாவது நீங்கள் செய்யும் தவறுக்கு துணையிடம் மன்னிப்புக் கேட்க தயங்க கூடாது.

உங்கள் மீது தவறை வைத்துக் கொண்டு துணை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது ஆணாதிக்கத்தை குறிக்கிறது. இது இல்லற பந்தத்தில் இருக்க கூடாது அதிகாரம்.

கேளிக்கை – கோபம்!

எது சீரியஸ், எது கேலி கிண்டல் என்று பிரித்து பார்க்க தெரியாமல். காமெடிக்கு கூறியதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு அதற்கு கோபத்தை வெளிப்படுத்துவது உறவை கொல்லும் விஷமாகும்.

இது மெல்ல, மெல்ல உறவில் இருக்கும் இணைப்பை, இறுக்கத்தை விலக செய்யும். கோபம் வரலாம். ஆனால் தேவையே இல்லாமல்… சூழலை புரிந்துக் கொள்ள இயலாமல் வெளிப்படும் கோபம் முதிர்ச்சி இன்மையை வெளிப்படுத்துகிறது.

கோபம்!

ஆக்ரோஷம், அசௌகரியம், கோபம், பழி தீர்த்தல் போன்ற குணங்கள் இல்லற பந்தத்தில் இருக்க கூடாது. கணவன் – மனைவி உறவுக்குள் இவை எல்லாம் இருந்தால் நிச்சயம் அது ஒரு அபாயமான நிலைக்கு அழைத்து செல்லும்.

இவை அணைக்க முடியாத காட்டுத்தீயாக உறவில் உருவெடுக்கும். இதனால் தவிர்க்க முடியாத சோகத்தை சந்திக்க நேரிடும். ஒரு முடிவை எடுக்கும் போது முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் தெளிவு இருக்காது.

எனவே, எக்காரணம் கொண்டும் உங்கள் உறவில் இந்த ஐந்து தவறுகளை செய்துவிட வேண்டாம். மேலும், தவறை உங்களிடம் வைத்துக் கொண்டு துணையை கொடுமை சந்தேகிக்க, கொடுமை செய்ய வேண்டாம். திருமணம் உறவில் கணவன் படகாக இருக்க வேண்டுமே தவிர தமிங்கிலமாக இருக்க கூடாது.

Sharing is caring!