நீரிழிவு நோயால் வரும் குழிப்புண்ணை குணப்படுத்தும் அதிசய இலை!

ஆவாரம் பூ நீரிழிவுக்கு அருமருந்து என்பது தெரியும்.இதன் இலையும் நீரிழிவால் உண்டாகும் சர்க்கரை புண்ணுக்கு மருந்தாக கூடும்.

சர்க்கரை நோயால் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்துவது கடினமானது. குறிப்பாக குழிப்புண்ணுக்கு சிகிச்சை என்பது சிரமமானது.

இதற்கு பாரம்பரிய வைத்தியம் நிச்சயம் கைகொடுக்கும். ஆனால் குழிப்புண்ணை மிக ஆரம்ப தொடக்க நிலையில் கண்டறிந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இதிலும் மருந்துகள் உணவுமுறைகள் வாழ்க்கை மூறைகளோடு இந்த பாரம்பரிய வைத்தியத்தை மேற்கொள்ளலாம்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்காத போது கால்கள் மரத்து போக கூடும். கால்கள் மரத்து போக கூடும். நரம்புகளும் பாதிக்கப்படும்.

ஆனால் இந்த பிரச்சனையை உணரவே முடியாது. கால்கள் விரைத்து போன பிறகும் கால்களில் உணர்வை குறையும் போதும் என தீவிரமான பிறகு தான் உணர தொடங்குவார்கள்.

கால்கள் மரத்து இருப்பதால் அடி பட்டாலும் காயங்கள் உண்டானாலும் கூட அவை தெரியாமல் போகும்.

இந்த காயம்பட்ட இடம் தான் அதிகமாக அழுத்தம் கொடுத்து நடக்கும் போது உண்டாகும் புண்களின் அழுத்தம் தான் குழிப்புண்கள் போன்று மாறக்கூடும்.

சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் இருந்தால் இவை தீவிரமாக இருக்கும் போது ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் கால்களில் உள்ள திசுக்களுக்கு ரத்தம் போதுமான அளவு கிடைக்காது.

இந்நிலையில் புண்கள் உண்டாகும் போது போதுமான ரத்தம் கிடைக்காமல் ஆக்ஸிஜனும் பற்றாக்குறையாக இருப்பதால் புண்கள் ரணம் ஆறுவது சிரமமாக இருக்கும். அப்போது கிருமித்தொற்றும் எளிதாக பரவக்கூடும் என்பதால் பாதிப்பு தீவிரமாக இருக்கும்.

இந்நிலையில் சிகிச்சைக்கு போகும் போது மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலையில் மேற்கண்டு பாதிப்பு நேராமல் இருக்க அந்த உறுப்பை அகற்றிவிடுவார்கள்.

இது எல்லோருக்கும் இல்லை என்றாலும் தவிர்க்க முடியாத நேரங்களில் தீவிரமான சர்க்கரை நோயை கொண்டிருப்பவர்களுக்கு அவை மேலும் பாதிப்பை உண்டாக்காமல் இருக்க மருத்துவர் பரிந்துரைப்பார்.

மருந்தாகும் அதிசய இலை

ஆவாரம் இலையை அம்மியில் அரைத்து நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி புண்ணின் மீது வைத்து வெள்ளை துணியில் கட்டிகொள்ள வேண்டும். தினமும் இரவு நேரத்தில் கட்டி காலை எடுத்துவிட வேண்டும்.

தொடர்ந்து இதை செய்துவரலாம். நாளடைவில் புண் பாதிப்பு குறையக்கூடும்.

சர்க்கரை நோயாளிக்கு ஆரம்ப கட்டமாக இருந்தால் இந்த வைத்தியம் செய்யலாம். கூடவே வழக்கமாக எடுத்துகொள்ளும் மருந்து மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையையும் தவிர்க்க கூடாது. சில நாள்கள் தொடர்ந்து செய்தால் நிச்சயம் பலன் இருக்கும்.

Sharing is caring!