நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதமாகும்!

மிகவும் மோசமான நோய் எதுவென்றால் அது சர்க்கரை நோயாகத்தான் இருக்கும். அதுவரை இஷ்டம்போல சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் சர்க்கரை நோய் வந்தபின் இந்த உணவுக்கட்டுப்பாட்டால் சிறையில் வைத்ததுபோல உணருவார்கள்.

சர்க்கரை நோயை குணப்படுத்த இயலாவிட்டாலும் அதனை குறைக்கவும், கட்டுப்பாட்டில் வைக்கவும் ஏராளமான வழிகள் உள்ளது.

நீரிழிவு இரண்டு வகைப்படும். இரண்டு விதமான பாதிப்பிற்கும் வெவ்வேறு காரணிகள் மற்றும் அபாயங்கள் உள்ளன. அது மட்டும் அல்ல, மருந்து மாத்திரைகள் ஒரு புறம் இருந்தாலும் சில பழங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அவற்றை தினமும் குறைந்த அளவு எடுத்து கொண்டாலே போதும்.

அன்னாச்சிப்பழம்

அன்னாச்சிப்பழத்தில் க்ளெசெமிக் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிட சிறந்த பழமாகும். அதுமட்டுமின்றி இது உங்கள் ஆண்மையையும் அதிகரிக்கும்.

ஆப்பிள்

ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். அதில் அதிகளவு அசிட்டிக் அமிலம் இருக்கிறது. இதில் உள்ள பாலிபோனல்கள் பல நோய்களுக்கு எதிராக போராடுகிறது. அது மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த அளவு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.

தர்பூசணி

தர்பூசணி இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. இதில் உள்ள அதிகளவு பொட்டசியம் இதனை சிறுநீரக செயல்பாட்டிற்கான சிறந்த பொருளாக மாற்றுகிறது. உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்பட தர்பூசணி சாப்பிட வேண்டியது அவசியம்.

வாதுமை பழம்

இதில் குறைந்த அளவு கார்போஹைடிரேட்டும் அதிகளவு பைபரும் உள்ளது. அது மட்டுமின்றி அதிகளவு வைட்டமின் ஏ உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.

நாவல் பழம்

இந்த பழம் சர்க்கரையை கட்டுப்படுத்த மிகச்சிறந்த தேர்வாகும். மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

பப்பாளி

பப்பாளி குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பழமாகும். உங்கள் உணவில் பப்பாளியை சேர்த்துக்கொள்வது உங்களுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கும். ஆய்வுகளின் படி பப்பாளி சாப்பிடுவது சர்க்கரையை குறைக்க, உடல் பருமனை குறைக்க, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, அது மட்டுமின்றி சரும பொலிவிற்கு என பலவற்றிற்கும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!