நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கான உணவுப்பட்டியல்!

உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் உணவு பழக்கத்தை மாற்றினாலே பல உடல் சார்ந்த பிரச்னைகளை வெல்ல முடியும்.   நீரிழிவு பிரச்னைக்கு ஆளானவர்கள் தங்களது உணவு பட்டியலை பின்வரும் முறையில் அமைத்து கொண்டால் நீரிழிவை தடம் தெரியாமல் போக்கி விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.  நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு  பட்டியலை பார்க்கலாம்….

அதிகாலை:

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை, உப்பு சேர்த்து  அருந்தலாம்.  இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும்,  இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் , உடலில் சேர்ந்துள்ள  கெட்ட கொழுப்பைக் குறைக்கும் .

காலை உணவு:

காலை உணவில் தானியங்களைத் தவிர்க்கவும். பருப்பை அடிப்படையாகக் கொண்ட காலை உணவை உட்கொள்வது கணையத்தில் கார்போஹைட்ரேட் சுமையை குறைக்க உதவுகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது.

Sharing is caring!