நீரிழிவை விரட்டும் விதைகள்

ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான தீர்வை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கொண்டே இருக்கின்றனர்.

அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி என்பது மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இருப்பினும் அப்போதும் மக்கள் இதை விட ஆரோக்கியமாகத்தான் இருந்தனர். காரணம், அவர்கள் எடுத்து கொண்ட உணவும், இயற்கையோடு இணைந்து அவர்கள் மேற்கொண்ட வாழ்வும்தான்.

இயற்கை என்பதை, ஒவ்வொரு கனி முதல் காய் வரை அவர்கள் நன்கு பயன்படுத்தினர். அந்த வகையில் அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த நாவல் பழமும் அடங்கும்.

நாவல் பழத்தின் பெருமையை சொல்லி மாளாது. இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒரு கொடிய நோய்க்கு தீர்வாக இந்த பழம் இருக்கின்றது என்றால் அது எவ்வளவு அற்புதமான விஷயம் என எண்ணி பாருங்கள்.

நீரிழிவும் நாவல் விதையும்…
 • இந்த நாவல் விதையில் jamboline மற்றும் jambosine என்ற மூல பொருட்கள் உள்ளன.
 • இதுதான் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. குறிப்பாக இது இன்சுலின் அளவை உயர்த்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.
 • நாவல் பழத்தில் எந்த அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றதோ அதே அளவு இதன் விதைகளிலும் காணப்படுகின்றது.
நாவலின் எண்ணற்ற சத்துக்கள்

ஒரு சிறிய பழத்துக்குள் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா..! என்பதே மிக ஆச்சரியத்திற்குரிய ஒன்று. 100 g அளவிலான பழத்தில் உள்ள ஊட்டசத்துக்கள்…

 1. கால்சியம் 15 mg
 2. இரும்பு சத்து 1.41 mg
 3. மெக்னீசியம் 35 mg
 4. பாஸ்பரஸ் 15 mg
 5. சோடியம் 26.2 mg
 6. வைட்டமின் சி 18 mg
 7. கரோட்டின் 48 ug
 8. நீர்சத்து 84.75 gm
சர்வதேச ஆராய்ச்சியின் முடிவு

எந்த ஒரு பொருளை பற்றிய குறிப்பையும் மருத்துவ ஆராய்ச்சியே முடிவு செய்யும். அந்த வகையில் இந்த நாவல் விதைகளில் பல வகையான மருத்துவ குறிப்புகள் இருப்பதாக Asian Pacific Journal of Tropical Biomedicine என்ற ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன. அதாவது, நாவல் விதைகளில் hyperglycaemia வை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறுகின்றனர்.

Sharing is caring!