நுளம்பை விரட்டும் மூலிகை செடி

திருநீற்றுப்பச்சை, கரந்தை அல்லது துன்னூத்துப் பச்சிலை வீடுகளில் வளர்க்கப்படும் மூலிகை. இந்த மூலிகை, பேசில் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவில் கைமருந்தாகவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உணவிலும் மிகுதியாகப் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது.

திருநீற்றுப்பச்சைக்கு உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் ‘திருநீற்றுப்’பச்சிலை எனும் பெயர் உருவாகியிருக்கலாம்.

 திருநீற்றுப்பச்சையை அறைத்து உடலில் பூசினால் அது சிறந்த  கொசு விரட்டியாக பயன்படும். மேலும் இந்த இலைகளின் புகையினால் கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடிவிடும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. மேலும் சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது. பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு மற்றும் பருவின் தழும்புகளும் மறையும்.

இலை மட்டுமல்ல. இதன் விதைகளிலும் மருத்துவ குணங்கள் அதிகம் , பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.


சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தசர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.

Sharing is caring!