நூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழ……யாருக்கும் தெரியாத பரம இரகசியம்..!!

யாருக்குத் தான் 100 ஆண்டுகள் நீடூடி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது?… எதுவுமே செய்யாமல் வாழ்நாள் முழுவதும் சோம்பேறியாக இருந்துவிட்டு, வேலை செய்வது, சாப்பிடுவது, தூங்குவது என காலத்தைக் கழிக்கிறோம்.

எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று கேட்டால் அது விதி என்று மிக எளிமையாக சொல்லி நகர்ந்துவிடுவோம். ஆனால் நம்முடைய சித்தர்கள் சில விஷயங்களை சொல்கிறார்கள்.அவற்றின்படி முறையாக வாழ்க்கையை நடத்துபவர்கள் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வார்களாம். அதுபோல அறிவியல் ரீதியாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ சில வாழ்வியல் முறைகளைக் கூறுகிறார்கள்.

என்னென்னவெல்லாம் செய்தால் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம்?…

அதிகாலையில் எழுபவன்,இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.
முளை கட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.மண்பானைச் சமையலை உண்பவன்.உணவை நன்கு மென்று உண்பவன்.
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை, சேர்த்துக் கொள்பவன்.வெள்ளை சர்க்கரையை உணவுப் பண்டமாக ஏற்றுக் கொள்ளாதவன்
கோலா கலர் பானங்களை அதிகம் உபயோகிக்காதவன், மலச்சிக்கல் இல்லாதவன்
கவலைப்படாத மனிதன், நாவடக்கம் உடையவன்
படுத்தவுடன் தூங்குகிறவன்,தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்கற்பு நெறி தவறாது வாழ்பவன்மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.

ஈகை எனும் கொடுத்து உதவும் உன்னத மனப்பான்மையை வளர்ப்பவன்.
வளையாத முதுகுத் தண்டுடன் எப்போதும் நிமிர்ந்து உட்கார முடிந்தவன். இடது பக்கமாகப் படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்,தூங்கி எழுந்ததும் காலை 2 டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.உணவு உண்ண வேண்டிய முறையும், அளவும் அறிந்து உண்பவன்.வாழ்க்கையில் நம்பிக்கை பொறுமையுடன் வாழ்பவன்10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவர்.மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ முடியும் என்று கூறப்படுகிறது.

Sharing is caring!