நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்!

கண்ணன் என்பவர் ஒரு கிராமவாசி. மூட்டை தூக்கும் தொழிலாளி. காலையில் வேலைக்கு போனால் இரவு நேரமாகி தான் வீட்டுக்கு வருவார். வேலை இருந்தால் தான் கூலி. அதுவும் மிகவும் குறைவு.

கண்ணனின்  மனைவி சீதை, நரசிம்மரின் பக்தை.அவள், தினமும் நரசிம்மர் ஆலயம் சென்று வணங்கி வருவாள்.நெற்றியில் திருமண் இடுவாள். ஏழைத் தொழிலாளியின் மனைவியானாலும், வறுமையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள்.தன் கணவரிடம், “என்னங்க! நீங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முன், நெற்றியில்திருமண் இட்டுட்டு கிளம்புங்களேன்” என்பாள். (திருமண் என்பது இங்கு நாமம், விபூதி அல்லது குங்குமம் போன்றவற்றை குறிக்கிறது)

அதற்கு கண்ணன், ‘மனுஷன், காலையில் மண்டிக்கு போனா தான் மூட்டை இறக்க வாய்ப்பாச்சும் கிடைக்கும்’என்பார். அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார் .அவர் திருமண் அணிவதின் மகிமை பற்றி பேசினார். இதைக் கேட்ட சீதை, “நீங்க! திருமண்  இட வேண்டாம். காலையில், வேலைக்கு போகும் வழியில்,திருமண் இட்டுள்ள, ஒருவர் முகத்திலாவது, விழிச்சிட்டு போங்க’’, என்றாள்.

கண்ணன் ஒப்புக்கொண்டார்…அவ்வூரில் கோவிந்தன் என்ற விவசாயி, தினமும் காலையில் நீராடி, நெற்றியில் திருமண் அணிந்து, வயலுக்கு செல்வதை கண்ணன் அடிக்கடி பார்த்துள்ளார்.

கண்ணன், தினமும், கோவிந்தன்  முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு  செல்வதை வழக்கமாக்கி கொண்டார். ஒருநாள் காலையில் ,கோவிந்தனைக் காணவில்லை. கண்ணன் திண்டாடி விட்டார். கோவிந்தன் முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார்.

அன்று ஏகாதசி என்பதால்,  கோவிந்தன், நரசிம்மர் தரிசனம் முடித்து விட்டு, வயலுக்கு போய்விட்டார்.  வயலில் ஏர் ஓட்டிய  போது, அவரது காலில்  ஏதோ தட்டுப்பட்டது. அவ்விடத்தை தோண்டி பார்த்தார். அங்கு, இரண்டு பானைகளில், தங்க காசுகள் இருந்தன. அவர், அந்த பானைகளை எடுக்கவும், கண்ணன் அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது.

Sharing is caring!