நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான்

திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அவ்வாறு வெளி வந்தவர்களில் ஒருவர்தான் தன்வந்திரி பகவான். இவர் நோய் தீர்க்கும் தெய்வமாக பார்க்கப்படுகிறார்.

அமுத கலசத்தை தாங்கியடி வீற்றிருக்கும் இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு என்ற இடத்தில் சுந்தராஜ பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

இவரது சன்னதியில் லேகியம் மற்றும் தைலம் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. லேகியத்தை சாப்பிட்டு தைலத்தை உடலில் தேய்த்து கொண்டால் நோய்கள் பறந்தோடும் என்று கூறப்படுகிறது.

Sharing is caring!