பக்தரிடம் உரிமையோடு தட்சணை வாங்கிய சாய்பாபா

“அவஸ்தே”  என்ற பக்தர் ஒருவர் தன் மனைவி  மற்றும் மகனுடன் சாய்பாபாவைத் தரிசிக்க ஒரு சமயம் ஷீரடிக்கு வந்திருந்தார் . அவர் இன்டோர் சமஸ்தானத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார் . அவரது மகனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது . திருமணச் செலவிற்காகத் தன்வசம்  400 ரூபாய் வைத்திருந்தார்.  அவஸ்தேயின் மனைவி 300 ரூபாய் வைத்திருந்தார்.

 சாய்பாபாவைப் பக்திப்பரவசத்துடன் . தரிசனம் செய்தனர் . அப்போது திடீரென்று சாய்பாபா, “எனக்கு தட்சிணை கொடுப்பீர்களா? என்று கேட்டார் .
இதனை எதிர்பார்க்காத அவஸ்தே ,” சாய்பாபா கேட்டு மறுக்க முடியுமா? கண்டிப்பாகத் தருகிறேன் ” என்றார் . “30 ரூபாய் தட்சிணை கொடு” என்றார்  சாய்பாபா. உடனே ,அப்படியே எடுத்துக் கொடுத்தார் அவஸ்தே . அப்புறம் அவஸ்தேயின் மனைவியைப் பார்த்து, “நீங்களும் கொடுப்பீர்களா?” என்று கேட்டார் சாய்பாபா. எப்படி மறுக்க முடியும்? சம்மதித்தார் அவஸ்தேயின் மனைவி.  அப்படியே கேட்ட பணத்தையும் கொடுத்தார்.

இப்படி இருவரிடமும் மாறிமாறி தட்சிணைப் பெற்றார் சாய்பாபா . சரியாக அவர்களிடம் இருந்த அத்தனை பணத்தையும் பெற்ற பிறகு , அவர்களிடம் தட்சிணை கேட்பதை நிறுத்தி க் கொண்டார் சாய்பாபா.

சாய்பாபா கேட்டு தட்சிணை கொடுத்ததால் மனம் முழுவதும் மகிழ்ச்சி அலை அடித்தாலும் , தங்கள் இருவரிடமும் இருந்த அத்தனை பணமும் தட்சிணை கொடுக்கப்பட்டுவிட்டதால் , தற்போது ஊருக்குத் திரும்பிச் செல்லக்கூட காச எதுவும் இல்லாதது அவஸ்தேயின் மனதை கவலை அடையச் செய்தது. துக்கம் சுனாமியை உள்ளுக்குள் அடிக்க ,சாய்பாபாவிடம் விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தார் அவஸ்தே.

அப்போது, சாய்பாபாவின் நெருங்கிய பக்தரான ஜோக்,  அவஸ்தேயைத் தட்டிக் கொடுத்து குஷிப்படுத்தினார் . சாய்பாபா உங்களிடம் இருந்து ஏராளமாகத் தட்சிணைப் பெற்றுக்கொண்டதால் நீங்கள் பெரும் யோகம் செய்தவராகி விட்டீர்கள்  .நிறையப் பேர்  தட்சிணை கொடுத்தும் ஏற்காமல் திருப்பி அனுப்பிவிடும் சாய்பாபா உங்களிடம் இப்படிக் கேட்டு வாங்கி இருப்பதால் நீங்கள் பெருமைக் குரியவர்களாகி இருக்கிறீர்கள்.  பெரும் அதிர்ஷ்டசாலி . பொதுவாக அவர் வாங்கும் தட்சிணைக்கு பத்து மடங்கு அதிகமாகத் திருப்பிக் கொடுக்கும் மணம் படைத்தவர் சாய்பாபா ” என்று மகிழ்ச்சியிடன் கூறினார்  ஜோக் .

ஆனால் இந்த மகிழ்ச்சியில் திளைக்கும் மனமில்லாமல் வருத்தத்துடன் காணப்பட்டார் அவஸ்தே.
“சந்தோஷப்படாமல் ஏன் சங்கடத்துடன் காட்சியளிக்கிறீர்கள்?  என்ன பிரச்னை ?” என்று கேட்டார் ஜோக்.

Sharing is caring!