பக்தியும் தூய்மையும் உடலுக்கு மட்டுமா?

அவ்வப்போது எல்லா மதகுருமார்களும் சொல்வதுதான். இறைவனுக்கு தேவை உடல் தூய்மையை விட மனத்தூய்மையே. முனிவர் ஒருவர் இருந்தார். காலையும் மாலையும் பக்தியுடன் லிங்கத்தை ஆகம முறைப்படி பூஜித்துக் கொண்டிருந்தார். பூஜைக்குரிய பொருள்களை அவரது சீடர்கள் ஏற்பாடு செய்து முனிவர் பூஜை செய்யும் போது அருகில் இருந்து எடுத்து கொடுப்பார்கள்.

எல்லாவற்றிலும் தூய்மையும், ஒழுங்குமுறையும் கடைப்பிடிப்பதில் கவன மாக இருக்கும் முனிவருக்கு சிஷ்ய பிள்ளைகளும் அப்படியே இருக்க வேண் டும் என்ற எண்ணம் உண்டு. அதனால் சீடர்களும் மிகுந்த பயபக்தியுடன் அவ ருக்கு வேண்டியதையும் பூஜைக்குரியதையும்கவனமாக குறிப்பறிந்து  எடுத்து தருவார்கள். பணியில் சிறிது தவறு நேர்ந்தாலும் முனிவரின் கோபம் மிக அதிகமாக இருக்கும்.

முனிவருக்கு சீடர்கள் பலர் இருந்தாலும் ஒருவன் மட்டும் குருவிடம் எச்சரிக் கையுடன் பக்தியுடன் நடந்துகொள்வான். எப்பொழும் கவனமாக இருக்கும் அவனிடம் குருவுக்கும் மிகுந்த பிரியம் உண்டு. ஒருமுறை முனிவரை காண வந்த மக்களில் ஒருவருக்கும் முனிவருக்கும் வாக்குவாதம் உண்டானது.

வாக்குவாதம் முற்றியதில் பொறுமை இழந்த ஒருவன் முனிவரை தரக்குறை வாக விமர்சித்து சென்றான். மற்றவர்கள் முன்னிலையில் இப்படி நடந்ததை அவமானமாக உணர்ந்த முனிவரின் சிந்தனை அதில் மட்டுமே லயித்திருந்தது. சீடனும் அவ்வப்போது யோசனையுடன் இருக்கும் முனிவரின் முகம் பார்ப்ப தும் பிறகு வேலை செய்வதுமாக இருந்தான்.

மறுநாள் பூஜைக்குரிய நேரமாயிற்று. இவனும் எல்லா பொருள்களையும் எடுத்து வந்து குருவின் அருகில் வைத்து விட்டு அவரது குரலுக்காக காத்தி ருந்தான்.  ஆனால் குரு யோசனையோடு இருக்கவே குருவே பூஜை செய்யா மல் ஏதோ யோசனையில் இருக்கிறீர்களே என்றான். அதுவரை அமைதி காத்த குருவுக்கு கோபம் வந்துவிட்டது.  எனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நீ பெரிய மகானாகிவிட்டாயா? பூஜையின் போது தடங்கல் செய்யும் நீ இனி என் முன்னால் நிற்காதே என்றார்.

அவன் அமைதியாக நீங்கள் ஏன் நேற்று நடந்ததையே நினைத்து வருந்தி கொண்டிருக்கிறீர்கள். ருத்ரனை பூஜிக்கும் நீங்கள் உங்களை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அது ருத்ரனையே சாரும் என்பதை அறியவில்லையா. உடல் தூய்மை பற்றி பேசும் நீங்கள் உள்ளத்தில் நேற்றைய அழுக்கை சுமந்து கொண் டிருக்கிறீர்களே.

Sharing is caring!