பஞ்சபூதத்தை உள்ளடக்கியது நம் கைவிரல்கள்…!

நடனத்தின் போது பாவங்களை குறிக்க பயன்படுத்திய முத்திரைகள் உடலின் ஆரோக்யத்தையும் காக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். முத்திரப் பயிற்சியை நமக்கு அருளியவர்கள் சித்தர்கள். எப்படி பயன்படுத்தினாலும் முத்திரைப் பயிற்சி நரம்பு மண்டலத்தில் நல்லதை செய்து ஆரோக்யத்துக்கு துணை புரிகிறது.

முத்திரைப் பயிற்சி உடலுக்கு கேடு விளைவிக்காது. பக்க விளைவுகள் உண்டாக் காது. நன்மையை மட்டுமே தரும். உடலில் வியாதிகள் வராமல் காக்கவும் வியாதிகள் இருந்தால் பொறுமையாக குணமடையவும் வழிகாட்டுகிறது. உடலில் சக்திகள் கிடைக்க வேண்டிய இடத்துக்கு ஆற்றலை தருகின்றன. முத்திரைப் பயிற்சிக்கு மூலதனம் கைவிரல்கள் தான். முத்திரைப் பயிற்சி பற்றி தன்வந்திரி முனிவர் தன்னுடைய தன்வந்திரி வைத்தியம் 1000 என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மோகினி முத்திரை, சோபினி முத்திரை, திருவினை முத்திரை, யோனி முத்திரை, அபான முத்திரை,சுவகரண முத்திரை போன்ற ஆறு முத்திரைகளும் சித்தியுள்ள முத்திரைகள் என்றும் கூறுகிறார் தன்வந்திரி. சின் முத்திரை, அனுசாசன் முத்திரை, கருட முத்திரை, முகுள முத்திரை, சுரபி முத்திரை, சங்கு முத் திரை, குபேர முத்திரை, சுவகரண முத் திரை, யோனி முத்திரை, அபான முத்திரை, ஞான முத்திரை, வாயு முத்திரை, சூரிய முத்திரை, பிராண முத்திரை, பச்சன் முத்திரை, லிங்க முத்திரை, அபான வாயு முத்திரை, வருண முத்திரை, ஹாகினி முத்திரை, பிருதிவி முத்திரை, பூதிமுத்திரை, தியான முத்திரை, வஜ்ஜிர பத்ம முத்திரை என பல வகையான யோக முத்திரைகள் யோகக் கலையில் உள்ளன.

பஞ்சபூதங்களினால் ஏற்படும் குறைபாட்டை நிவர்த்தி செய்ய ஆயுர்வேதத்திலும் சித்தமருத்துவத்திலும் சிகிச்சைமுறைகள் உண்டு. ஆனால் நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களை நாமாகவே சரி செய்ய எளிய முத்திரைகள் பலவற்றையும் நமக்கு தந்திருக்கிறார்கள். நமது கையில் உள்ள ஐந்து விரல்களுள் ஒவ்வொரு விரலும் ஒரு பஞ்சபூதத்தை இயக்குகிறது. பெரு விரல் நெருப்பு, ஆட்காட்டி விரல் காற்று, நடுவிரல் ஆகாயம், மோதிர விரல் நிலம், சுண்டுவிரல் நீர், எந்த பூதத்தைச் சமன்படுத்த வேண்டுமோ அதற்குரிய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தாலேஅந்த பூதம் சமனாகி விடும். இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ளவும் முடியும்.

முனிவர்கள் தவம் செய்யும் போது பசி, தாகம், நோய் இவை எதுவும் அண்டாமல் இருக்க முத்திரைகளைப் பயன்படுத்தினார்கள்.உரிய முத்திரைகளை முறை யாகக் கற்றுச் செய்யும் போது உடலில் இருக்கும் குறிப்பாக விரலில் இருக்கும் சக்திப்புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன்மூலம் உடலின் உள்ளுறுப்புகளில் பிராண சக்தியின் அளவு அதிகரிக்கிறது.

உடல் இயங்கத் தேவையான உயிர்ச் சக்தியை உற்பத்தி செய்து தருவது நம் உடலிலுள்ள சக்கரங்களே. இவையே உடலில் சக்தி மையங்கள் என்று அழைக் கப்படுகின்றன. சக்கரங்கள் பிரச்னை இன்றி இயங்கும் போது உடலும் ஆரோக் யமாக இயங்கும். சக்கரங்களில் சக்தி குறைந்து தேக்கம் ஏற்படும் போது தான் நோய்கள் எட்டிப்பார்க்கின்றன. இந்தச் சக்கரங்களுக்கும், விரல்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டு எளிய முத்திரை பயிற்சியை மேற்கொண்டாலே நோய் நொடியின்றி ஆரோக்யமான வாழ்க்கை வாழலாம். யோகாசனங்களைச் செய்ய முடியாதவர்கள் முத்திரைகளை மட்டுமாவது செய்து பழகினால் உடல்நலம், மனநலம் பெறலாம். உதாரணத்துக்கு எல்லோராலும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு முத்திரை பயிற்சியைப் பார்க்கலாம். செய்து பாருங்கள். நீங்களும் உணர்வீர்கள்

நீர் முத்திரை :

கட்டை விரலின் நுனியும், சுண்டு விரலின் நுனியும் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்ச பூதங்களைச் சமன் செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.

தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும் போது முதுகுத் தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை, மாலை இரு வேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.

ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைத் தவிர்ப்பது நல்லது. முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரைச் செய்வதை நிறுத்தி விட வேண்டும்.

உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக்காற்று இந்த முத்திரைப் பயிற்சி செய்தவன் மூலம் சரியாகும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் கோடைக் காலத்தில் குறைந்தது அரைமணி நேரம் செய்ய வேண்டும்.

Sharing is caring!