பத்திரகாளி கோவில்கள் நீர்நிலைகளில் இருப்பது இதனால்தான்…!

இறைவன் அறியாத செயல்கள் என்று எதுவுமில்லை. பின் விளைவுகளை அறிந்தே இருந்தாலும் உலகுக்கு பாடம் கற்பிக்கவே ஒவ்வொரு சூழ்நிலை யையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கடுந்தவம் புரிபவனுக்கு வரம் அளித்தால் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை மனிதர்கள் யூகமாகத்தான் சொல் வார்கள். ஆனால்  என்ன நடக்கும் என்பது முக்காலமும் உணர்ந்த  இறைவனுக் த் தெரியவே செய்யும்.

அசுர குலத்தைச் சேர்ந்த தரிக்கா என்னும் மன்னன் இருந்தான். பிறவியி லேயே அசுர குணத்தைக் கொண்டவனாயிற்றே.. கடுமையான வரத்தின் மூலம் மேலும் பல  வரங்களைப் பெற விரும்பினான். படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவை நினைத்து தவம் புரிய தொடங்கினான். தரிக்காவின் தவத்தைக் கண்டு மெச்சிய பிரம்மா தரிக்கா முன்பு தோன்றினார்.

”படைப்புக் கடவுளான பிரம்மனே உன்னை வணங்குகிறேன்” என்றான் தரிக்கா மகிழ்ச்சியோடு.. ”உனது தவத்தால் மெச்சினேன் மகனே.. உனக்கு வேண்டும் வரத்தை கேட்பாய்” என்றார் பிரம்மா.. “நான் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்க வேண்டும். எந்த ஆண்மகனாலும் தேவர்களாலும் எனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று வரமளிப்பீர்களா?” என்றான்  அசுரன் தரிக்கா.. பின் விளை வுகளை  அறிந்தும் அறியாதவாறு  பிரம்மனும்  ”அப்படியே ஆகட்டும் தரிக்கா” என்று வரமளித்து மகிழ்ந்தார்.

ஏற்கனவே அசுர குணம் கொண்ட தரிக்காவுக்கு பிரம்மனின் வரம் மேலும் அசுர குணத்தை அதிகரித்தது. இனி என்ன செய்தாலும்  நம்மை அழிக்க இயலாது.  என்னை அழிக்க ஆண்மகன்களே இல்லாத போது  பெண்களால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று கொக்கரித்தான். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துவம் சம் செய்தான்.  பலமிக்க சக்திவாய்ந்த தேவர்களால் கூட தரிக்காவை நெருங்க முடியவில்லை. ”உலகை காக்கும் பரமனே  நீதான் எங்களைக் காப்பாற்ற வேண் டும்” என்று சிவனை தஞ்சம் அடைந்தார்கள். நடந்ததை அறிந்த சிவப்பெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து  பத்ரகாளியை  உருவாக்கினார்.

மமதை கொண்டிருந்த தரிக்காவின் முன்பு வந்தாள் பத்ரகாளி.’ஆண்களே அச்சம் கொண்டு முன்வர தயங்கும் போது ஒரு சாதாரண பெண் என் முன்பு நடமாடுவதா’ என்று தரிக்கா பத்ரகாளியை நெருங்கினான். ”ஆண்மகனாலும் வெல்ல முடியாத சக்தி கொண்டவன் நான். என்ன தைரியம் இருந்தாள் என் முன்பு வந்து நிற்பாய். உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று  கர்வம் கொண்டு மோத வந்தவனை ஆவேசத்துடன் எதிர்கொண்ட பத்ரகாளி அவனை வதம் செய்தாள். துன்பத்தி லிருந்த மக்களையும்,  தேவர்களையும் காப்பாற்றி அனைவரும் வழிபடும் பெண் தெய்வமாக பத்ரகாளியாக மாறினாள்.

எப்போதும் ஆவேசத்துடன் இருக்கும் பத்ரகாளியின் ஆலயங்கள் பெரும் பாலும் நீர் நிலைகளில் இருப்பதற்கு காரணம் உக்கிரமான அவளை குளிர்விப் பதற்குதான் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இறைவன் கொடுக்கும் வரமாக இருந்தாலும், செல்வமாக  இருந்தாலும்   நல்ல வழியில் பயன்படுத்தினால் நமக்கு அழிவில்லாமல் மேன்மையே உண் டாகும்.

Sharing is caring!