பத்தே பாசுரங்களால் பரந்தாமனை மனமுருக வைத்த திருப்பாணாழ்வார்!

‘என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே’ இது திருப்பாணாழ்வார் பாசுரம். பத்து பாசுரங்கள்  மட்டும் பாடி, இதுவரை பார்த்தறியாத திரு அரங்ககனின் சோதியில் கலந்தவர் திருப்பாணர்.பிறப்பால் பிராமணர் அல்லாதவர். கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை.

அரங்கனின் திருவடி தொட்டு ஓடிக் கொண்டிருக்கும் காவிரி கரையில் நின்று, தொலை துாரத்தில் இருந்தே  குல வழக்கத்கிற்கேற்ப, கையில் யாழுடன் திருவரங்கனை பற்றி பாடல்கள் பாடி,மெய்மறந்து அரங்கன் திருவடிகளை வழிபட்டு வந்தார்.

ஒருநாள், அரங்கனின் திருமஞ்சனத்துக்காக காவிரியில் நீர் எடுத்துச் செல்ல, குடத்துடன் வந்தார் பட்டர் லோக சாரங்கர். வழியை மறைத்தபடி, தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த பாணரை, நகர்ந்து செல்லும்படி பட்டர் கூறினார். ஆனால், அதை கேட்கும் மனநிலையில் பாணர் இல்லை.

கோபம் அடைந்த பட்டர், ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசினார். அது பாணரின் நெற்றியல் பட்டது, பாணரின் நெற்றியில் ரத்தம் வடிந்தது. உணர்வு வரப்பெற்ற பாணர், அரங்கனின் திருமஞ்சனத்துக்கு இடையூறு செய்துவிட்டோமே என வருந்தி, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

குடத்தில் நீரை சுமந்து கொண்டு, அரங்கனின் சந்நிதிக்குள் பட்டர் சென்றார். அங்கு, அரங்கனின் நெற்றியில் ரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது. பதை பதைத்த பட்டருக்கு என்ன செய்வது என தெரியாமல், அரங்கனனின் நெற்றியிலிருந்த ரதத்ததை துடைத்துவிட்டு, வீடு திரும்பினார்.

பல காலமாக நம்மையே பாடி வருகிற பாணன்,. புறம்பே நிற்க பார்த்திருக்கலாமோ என்றென்ணிய அரங்கன், பட்டரின் கனவில் தோன்றினான். ‘என் அன்பனான பாணனை,  இழிக்குலத்தவன் என்று எண்ணாது, உம் தோளில் அவனை சுமந்து கொண்டு, சந்நிதிக்கு வருக’ என்றான் அரங்கன்.

Sharing is caring!