பயம் என்ற சொல்லே இந்த ராசிப் பெண்களின் அகாராதியில் கிடையாதாம்.!! உங்கள் துணையும் இந்த ராசியா?

ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் விரைவில் பேசவும், நடக்கவும் தொடங்கி விடுவார்கள். பெண்களின் தைரியம் என்பது அவர்கள் பிறக்கும் போதே உடன்பிறப்பதாகும்.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண்கள் தங்கள் தைரியத்தை ஏதாவது ஒரு இடத்தில் காட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.

அது குடும்பமாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி. அனைத்து பெண்களுக்கும் தைரியம் இருந்தாலும் சில ராசிகளில் பிறந்த பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் அதிக தைரியசாலிகளாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்:சிம்ம ராசி பெண்களை போட்டி போட்டு நெருங்க நினைத்தால் நிச்சயம் போட்டி போட நினைப்பவர்களுக்கு ஆபத்து தான். சிம்ம ராசி பெண்களின் குறும்பு தனம் கூட துணிவை காட்ட கூடியதாகவே இருக்கும். விளையாட்டாக கூட இவர்களுடன் போட்டியிட வேண்டாம். சிம்ம ராசியை வெற்றி பெற ஒரே ஆயுதம் அன்பு மட்டுமே.

சிம்ம ராசி பெண்கள் எப்போதுமே பெருமைமிக்க ராசியின் அடையாளமாக இருப்பார்கள். இவர்கள் ராசியின் சின்னமே இவர்களுடைய தைரியம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இந்த ராசிகளின் கீழ் பிறந்தவர்களின் ஈகோக்கள் தங்கள் சொந்த திறன்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த சந்தேகங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க போதுமானது.ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் பார்க்கிறார்கள், எனவே தைரியமாக இருக்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

மேஷம்:மேஷ ராசி பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காது. ஏனெனில் இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான சூழலை விட்டு வெளியே வர முயலுவார்கள்.மற்ற பெண்கள் ஆபத்தாக நிறைந்த ஒன்றாக பார்ப்பதை இவர்கள் தங்களுக்கான வாய்ப்பாக உற்சாகத்துடன் பார்ப்பார்கள். சவால்களை சந்திப்பதில் இவர்களுக்கு எப்பொழுதும் தயக்கமோ, பயமோ இருக்காது, ஏனெனில் துணிபவர்களே வெற்றியை ருசிப்பார்கள் என்பது இவர்களின் கொள்கை ஆகும்.

தனுசு:இவர்களின் தைரியம் சிலரை இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றுகூட நினைக்க வைக்கும். தனுசு ராசிக்காரர்கள் எதற்கும் அஞ்சாமல் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது எப்பொழுதும் சிறப்பான முடிவுகளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள், இவர்களின் தைரியம் இவர்களுக்கான பாராட்டை பெற்றுத்தரும். ஒருவேளை இவர்களின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டால் சோர்ந்து போகாமல் அதனை நேர்மறையான முடிவாக ஏற்றுக்கொண்டு அடுத்த முயற்சியை தைரியமாக தொடர்வார்கள்.

விருச்சிகம்:துணிச்சலுடன் புத்திசாலித்தனமும் நிறைந்த பெண்களாக இவர்கள் இருப்பார்கள். உண்மையான வெற்றிக்கு சவால்களை சந்திக்க வேண்டியது அவசியம் என்று நன்கு உணர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.இவர்களின் குறிக்கோள் ஒன்றே போதும் இவர்களின் தைரியத்தை தூண்டுவதற்கு, செயல்பட முடியாத தருணங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இவர்களை மிகவும் காயப்படுத்தும். இது அவர்களின் தன்னம்பிகையை உள்ளிருந்தே சிதைக்கும்.

கும்பம்:இவர்கள் தங்களின் தைரியத்தையும், துணிச்சலையும் எப்பொழுதும் வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள். இவர்களின் ராசி மிகவும் புதிரானது, இவர்களின் தனித்துவமான குணாதிசியங்கள் இவர்களை இயற்கையாகவே துணிச்சலானவர்களாக மாற்றுகிறது.மிகவும் சுயாதீனமான இராசியான கும்ப ராசிக்காரர்களுக்கு இடையேயான தனிமை மற்றும் முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரிய சிந்தனை ஆகிய இரண்டும் சமுதாயத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு முரணான பண்புகளாகும். இது தைரியமாக வாழத் தெரிந்த ஒரு ராசியாகும்.

Sharing is caring!