பாபாவையும் விட்டு வைக்காத விதியும், சகுனமும்!

சாய்பாபாவின் மரணத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் முகமாக ஒரு சகுனத்தடை நிகழ்ந்த சம்பவமும் உண்டு. சாய்பாபா தன்வசம் “செங்கல்” ஒன்றை வைத்திருந்தார்.  இரவு நேரங்களில் அதில் சாய்ந்து படுத்திருப்பது அவரது வழக்கம்.

இந்தச் செங்கல் ஏதோ தெருவிலோ, அல்லது சூளையிலோ கிடைக்கப் பெற்றதல்ல . சாய்பாபாவின் “குருநாதர் வெங்குஸதாஸ்” அளித்தது . அதனுடன், ஒரு வஸ்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதிலும், அந்த செங்கலில் தன் பாதத்தைப் பதித்து சாய்பாபாவிற்கு அவரின் குருநாதர் அளித்திருந்தார் . இவ்விரண்டையும் கண்களைவிடவும் கவனமாகப் பாதுகாத்து வந்தார் சாய்பாபா. இன்னும் ஒரு படி மேலே சொல்வதானால், தனது குருநாதராகவே பாவித்து வந்தார்.

சாய்பாபா உறங்குவதற்கான படுக்கையை உதறி விரித்து , தக்க ஏற்பாடுகளை செய்வது மகல் சபதி . சாய்பாபாவின் பணியாளர் “மாதவபதஸே” தான் அந்தச் செங்கலையும், வஸ்திரத்தையும் கவனமாக எடுத்து வந்து படுக்கையில் வைப்பது வழக்கம். அதில் தலைவைத்து நிம்மதியாக சாய்பாபா உறங்குவது, “ஒரு அற்புதமான குழந்தை கண்மூடி துயில் கொள்வது போல் அத்தனை அழகாக இருக்கும்”!

சாய்பாபா முக்தி அடைவதற்குச் சொற்ப தினங்களுக்கு முன்புதான், அந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தது  .  வழக்கம் போல, அன்று இரவும் அந்தச் செங்கலை பணியாளர் எடுத்து வந்தார், சாய்பாபாவின் படுக்கையில் வைப்பதற்காக.  ஆனால்-

அப்போது சற்றும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது . அது நாள் வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் ஒரு வித நேர்த்தியுடன் நடந்துவந்த செயல் அன்று தடுமாறியது .பணியாளர் கையிலிருந்த அந்தச் செங்கல், படுக்கையில் வைக்கப்படுவதற்கு முன்னரே முந்திக் கொண்டது. தவறுதலாக அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தது. செங்கல் உடைத்தும் போனது .

பணியாளர் பதறிப் போனார். இதனைப் பார்த்த மகல்சபதி , ‘என்ன நடக்கப் போகிறதோ என்று அஞ்சி நடுங்கினார்
காரணம், அந்தச் செங்கலின் மகிமையும், சாய்பாபா அதனைப் போற்றிப் பாதுகாத்து வருவதும் அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

Sharing is caring!