பாபா என்னும் ஒற்றைச் சொல் போதுமே

இறைவனை வணங்க அனுபவம் தேவையில்லை. ஆத்மார்த்தமான அன்பு ஒன்று போதும். இன்னும் ஒன்று இறைவன் வெளியிலோ விண்வெளியிலோ இல்லை… நம் மனதிற்குள்ளே இருக்கிறான்.. மனம் முழுக்க இறைவனை நிரப்பி இறைநாமம் சொல்லும் பாபாவின் பக்தர்களுக்கு இத்தகைய அற்புத தருணங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கிடைக்கும்…

பக்தர்களின் குறிப்பறிந்து வேண்டியதை  நிறைவேற்றும் பாபாவுக்கு தெரியும்.. அத்தகைய கடினமான  சூழ்நிலையிலிருந்து அவர்களை வெளிக் கொண்டு வரும் வித்தையை…. பாபாவின் பக்தை  ஒருவள் இருந்தாள்.. எப்போதும் பாபா என்று சொன்னாலும் அவருக்கு தனியாக பூஜைகளும், ஆரத்திகளும் செய்யவே மாட்டாள்.. விரத தினமாக இருந்தாலும் இன்று மட்டும்தான் அவருக்கு விசேஷமா.. எப்போதும் நம்மை பாதுக்காக்கும் அவருக்கு தனியாக விசேஷ தினம் கொண்டாட வேண்டுமா என்று கேட்பாள்…

பக்தையின் வீட்டில் எல்லோரும் பாபாவின் பக்தர்கள் தான்.. எல்லோரும் வாரம் தவறாமல் கோயிலுக்குச் செல்வதும்.. பாபாவை வழிபடுவதுமாக இருப்பார்கள். இவள் எதிலும் கலந்துகொள்ள மாட்டாள்.. வேண்டாத ஒன்று நிகழ்ந்தாலும் பாபாதான் செய்திருக்கிறார். அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று  இக்கட் டான சூழ்நிலையிலிருந்து மனதை வேறு திசையில் கவனம் செலுத்துவாள்..

கோயிலுக்கு அழைத்தாலும் ’கண்களை மூடி இங்கே நில்லுங்கள்.. மனக்கண்ணிலும் புறக்கண்ணிலும் பாபா புன்னகையோடு தரிசனம் தருவார். எனக்கு அப்படித்தான் தரிசனம் தருகிறார்’ என்பாள்..  ”பாபாவை  வழிபடுவதற்கு உனக்கு விருப்பமில்லை அதனால் தான் மறுக்கிறாய்” என்றார்கள் வீட்டில்…

ஒருநாள் விஷக்காய்ச்சலாய் அவள் உடல் கொதித்தது. மறுநாள் முக்கியமாக வெளியில் செல்ல வேண்டிய நிலை.. எல்லோரும் பயந்தார்கள். டாக்டரிடம் காண்பிக்கலாமா என்றார்கள்.. எல்லாம் பாபா பார்த்துக்கொள்வார் என்று அலட்சியப்படுத்தினாள்.. இதற்கு கூடவா பாபா வருவார்… என்று  கேட்டபடி அனை வரும் சென்றுவிட்டார்கள்

இரவு படுக்கும்போது நடுசாமத்தில் கண்கள் தீயாய் எரிந்தது.. உடல் மேலும் அனலாக கொதித்தது. வலியில் முகத்தை சுழித்தாள். உதடுகள் வலியால் முணுமுணுத்தது… எல்லோருக்கும் பயமாக இருந்தது. அந்நிலையிலும் மூடிய கண்களினூடே கைகளை வணங்கி ”என்ன பாபா.. இப்படி  செய்கிறாய்.. உடலெல்லாம் கொதிக்கிறது.. கண்களை திறக்க முடியவில்லை.. நாளை என்ன செய்வேன்.. நீதானே என்னை பார்த்துக்கொள்கிறாய்..,  இப்போதே ஏதேனும் செய்யேன்” என்றாள் மனதில் வேண்டியபடி.. சரியாய் ஐந்து  நொடிகள்… தலையை வருடி விருட்டென்று விலகியது ஒரு கை.. அட என்ன ஆச்சர்யம்…. கண்களில் குளுமை படர்ந்தது… உடலில் இருந்த வலிகள் விலகியது…. உடலின் வெப்பம் தணிந்தது.. அமைதியாக எழுந்து உட்கார்ந்தாள்.. ”என்ன பாபா இது விளையாட்டு..”  என்று குழந்தை தாயிடம் கோபிப்பதைப் போல் செல்லமாக கோபித்துக்கொள்ளவும் தவறவில்லை..

Sharing is caring!