பார்லி தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா ???

மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லியும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

இதற்கு வாற்கோதுமை என்றொரு பெயரும் இருக்கிறது.

ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும், 19.7 சதவீதம் சுண்ணாம்பு சத்துகளோடு, பாஸ்பரசும், இரும்பு சத்தும் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு காப்பி, டீ கொடுப்பதை காட்டிலும் பார்லி கஞ்சி கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும்.

பார்லி கஞ்சி மட்டுமல்லாது, பார்லி தண்ணீரும் அதிக நன்மைகளை கொண்டது.

அதாவது, பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்தது மூன்று வேளையாவது குடித்து வந்தால் மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.

பள்ளி குழந்தைகள் பார்லி தண்ணீரை குடித்து வர, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

மேலும், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள். தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரை ஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

இதற்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்து கொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடை குறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில் கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி தண்ணீர் தினமும் ஒரு கப் அருந்தினால் கால் வீங்காது .

Sharing is caring!