பாலப்ராப்தி எப்போது கிட்டும்… விளக்கம் அளித்த சாய்பாபா!

சாய்பாபாவின் நெருங்கிய பக்தர்களில்  ஒருவர் பாபு சாஹேப்!.   நீண்ட நெடுங்காலமாக சாய்பாபாவிற்கு பல்வேறு தொண்டுகளைச் செய்து கொண்டு வந்தவர். அவர் எந்தவொரு பிரதிபலனையும் இதுவரை அவர் எதிர்பார்த்தும் இல்லை சாய்பாபாவிடம் கேட்டதும் இல்லை. ஆனால் திடீரென்று அவருக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. சாய்பாபாவிடம் கேட்டார்.  “இத்தனை காலமாக எதனையும் எதிர்பாராமல் தெளிந்த மனதுடன் உங்களுக்கு நான் தொண்டாற்றி வருகிறேனே சாய்பாபா, எனக்கு  பலன் எப்போது வரும்?” என்று கேட்டார். சாஹேப், இப்படிக் கேட்டதும் சாய்பாபா சற்று நேரம் அவரையே பார்த்தார். அவர் முகபாவனையில் இருந்து அவர் என்ன எண்ணுகிறார் என்பதை   சாஹேப்பினால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், சாய்பாபா பேசினார், ” அனைவரின் இதயங்களையும் சந்தோஷப்படுத்தி குதூகலம் அடையச் செய்யும் உனது சேவையை ஒப்புக்கொள்கிறேன். உன் மனமொன்றிய சேவையின் பாலப்ராப்தி, நீ  எப்போது என்னைப் போலவே கோவணத்துடன் உணவைப் பிச்சை எடுத்து உண்டு வருகிறாயோ , அப்போது வரும்”  என்றார் தீர்க்கமாக. அதாவது சாய்பாபாவைப் போல அனைத்திலும் பற்றினை விட்டொழிந்த பின்னரே பாலப்ராப்தி கிட்டும் என்பது சாய்பாபா கூறியதன் அர்த்தம் என்பது அப்போது சாஹேப்பிற்குப் புரிந்தது.

    ஓம் ஸ்ரீ சாய்ராம்

Sharing is caring!