பாவக்கணக்கை குறைக்க சித்ரகுப்தனை வழிபடுங்கள்…!

சித்திரகுப்தன் யார் என்று தெரியுமா? நாம் செய்யும் புண்ணிய பாவக் கணக்குகளை எழுதி வைத்து  இறைவனிடம் சமர்பிப்பவன்… அவன் நினைத்தால் நம்மை புண்னியம் செய்ய வைப்பான்..

சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் பிறரை துன்புறுத்திக்கொண்டே இருந்தான். அவனால் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்த அவனது தாய் எவ்வளவோ புத்திமடி சொல்லியும் அவன் எதையும் கேட்க வில்லை…அவன் வளர வளர அவனது கெட்ட சகவாசமும் அவனை விட்டு நீங்க வில்லை. அவனது தாயாரின் இறுதி காலம் நெருங்கிற்று…இப்போதாவது நான் சொல்வதைக் கேளேன் என்று அழத்தொடங்கினாள்.

“அதிகம் புத்திமதி  சொல்லாமல்  ஒன்றை மட்டுமாவது சொல்லு?” என்றான்.. ஒன்றா இரண்டா.. நீ செய்யும் அட்டகாசங்கள்.. எதைச் சொல்லி திருத்துவது என்று நினைத்த அவன் தாய்.. “நீ உன் சுபாவத்தை மாற்றிகொள்ளேன்” என்றாள் “சுபாவம் என்றால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டுமே…அதனால் என்னால் முடியாது” என்றான்.. “சரி பொய் சொல்வதை நிறுத்திவிடு.. வாழ்வில் எத்தருணத் திலும் பொய் சொல்லக்கூடாது.”.என்றாள்.. “அது எப்படி என்னால் முடியும்… வேறு ஏதாவது கேள்” என்றான்..”சரி நீ எதையும் செய்யாதே… ஆனால் பெளர்ணமி தோறும் சித்ரகுப்தாய நம என்று சொல்லிக்கொண்டிரு…  முக்கியமாக  சித்திரை மாத பெளர்ணமியன்று பெளர்ணமி முடியும்வரை சித்ரகுப்தாய நம என்று சொல்வதை நிறுத்தாதே..”. என்றபடி உயிர் துறைந்தாள்.

அம்மாவுக்காக எதையும் செய்ததில்லை. இதையாவது செய்வோம் என்று பெளர் ணமி காலங்களில் மட்டும் சிதரகுப்தாய நம மந்திரத்தை விடாமல் உச்சரித்து வந்தான். சித்ரகுப்தனுக்கு அவன் நாமம் சொல்வதால் மகிழ்ச்சியும்… தீயபழக் கங்களை நிறுத்தாததால் மறுபுறம் வருத்தமும் உண்டாயிற்று…இவன் தலையெ ழுத்து என்ன என்று அவன் காலக்கணக்கை புரட்டிப்பார்த்தபோது அவன் இன்னும் 7 நாட்களில் மரணத்தைத் தழுவுவான் என்றும்  புண்ணியமே செய்யாத அவன் நரகத்துக்குப் போவான் என்றும் குறிப்பிட்டிருந்தது.  முக்கால் நாழிகை மட்டுமே சித்ரகுப்தாய என்னும் நாமத்தால் சொர்க்கத்துக்கு போவான் என்பதையும் தெரிந்து கொண்ட சித்ரகுப்தன் அன்று இரவு அவன் கனவில் சென்று உனக்கு  விரைவில் மரணம் சம்பவிக்கப்போகிறது.  நாளைக்காலை உன் இடத்தில் குளத்தை வெட்டு மரணத்துக்கு முன்பு நீரூற்று சுரக்கும். மாடு வந்து தாகம் தீர்க்கும்.. மரணவித்த பின்பு  எமன் கேட்டால் முதலில் சொர்க்கத்தை அனுப விக்கிறேன் என்று சொல்… என்றார்.

மறுநாள் அவனுக்கு விழிப்பு வந்ததும் உடனடியாக குளத்தை வெட்ட ஆரம்பித்தான். அதேபோன்று ஒரு நாள் நீரூற்று வந்து மாடு ஒன்று தாகம் தீர்த்துகொண்டது…  அடுத்தநாள் மரணம் ஏற்பட்டு மேலோகத்துக்கு சென்றான். எமதர்மன் நீ செய்த புண்ணியத்தால் முக்கால் நாழிகை மட்டுமே சொர்க்கம் உண்டு.. எஞ்சிய காலங்கள் நரகத்தை  அடைவாய். முதலில் எங்கு செல்கீறாய் என்று கேட்டான்.. நான் சொர்க்கலோகத்துக்கு செல்கிறேன் என்றான்.. ஆனால் அவன் வெட்டிய குளத்தில் சுரந்த நீரூற்றால் விலங்குகள் தாகம் தீர்ந்தன. இவனுடைய புண்ணியக்கணக்கும் ஏறிகொண்டே போனது… சொர்க்க வாழ்வும் நீடித்தது…

செய்யும் பாவங்களுக்குப் பிரயாசித்தமாக புண்ணியகணக்கை ஏற்ற சித்திரகுப்தன் வழிசெய்வார் என்பதால் சித்ரா பெளர்ணமியான இன்று  இவரை வழிபட்டு பாவக்கணக்கை குறைத்துக்கொள்வோம்.

Sharing is caring!