பித்தப்பை கற்களுக்கு காரணம் இதுதான்…

பித்தப்பையில் கற்கள் பற்றி பார்த்தோம். இப்போது பித்தப்பையில் ஏன் கற்கள் உருவாகிறது அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்க்கலாமா?

ஒருவரது உடலில் பித்தநீரில் இருக்கும் கொழுப்புகளின் அளவு, வழக்கத்தை விட குறைவாக இருந்தால் பித்தக்கற்கள் உருவாகும். உடலில் இருக்கும் ஈரலானது, இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சி, பித்தநீராக வெளியேற்றுகிறது. இந்த பித்தநீரில் இருக்கும் கொழுப்பின் அளவு, சரியான  அளவாக இருந்தால் ஒன்றும் செய்யாது. ஆனால் கொழுப்பின் செறிவு அதிகமாக இருக்கும் போது, இவை கொழுப்பு கற்களாக மாறுகிறது என்றார்கள்.

பித்தநீர் வெளியேறும் உணவுக் குழாய்களுக்குள், ஏதேனும் அடைப்புகள் இருந்தாலும், பித்தகற்கள் உருவாவதற்கு வாய்ப்புண்டு. பெரும்பாலும் பித்தப்பையில் கற்கள் வரும் வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு முறைகளில் மாற்றமும், பித்தப்பையில் கற்கள் உண்டாக வாய்ப்புண்டு. நார்ச்சத்து மிக்க உணவுகளின் அளவு குறைந்ததும், கொழுப்புச்சத்துஅதிகமுள்ள உணவுகள் அதிகரித்ததுமே, பித்தப்பை கற்கள் அதிகரிக்க காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பையில் கற்கள் வரலாம்.

உடல்பருமனைக் கொண்டிருப்பவர்களால், உடலில் இருக்கும் அதிக கொழுப்புகள் வெளியேறும் பித்தநீரில் அதிக கொழுப்புகளை உண்டாக்கி, பித்தப்பையில் கற்களை உண்டாக்குகின்றன. 90 சதவீதம்  கற்கள் கொழுப்பினால் மட்டுமே உண்டாகின்றன.

சிலர் உடல் உழைப்பை கொண்டிருக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாக வாய்ப்புண்டு. அதிகப்படியான கொழுப்பு உணவுகளை உண்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் கற்கள் உண்டாகலாம். பரம்பரையாகவும், நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கும் கூட இந்தக் குறைபாடு தோன்றலாம். குடிப்பழக் கம், புகைப்பழக்கமும் கூட பித்தப்பையில் கற்களை உண்டாக்கும்.

Sharing is caring!