பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்!

நம்மில் பலரும், இறந்து போன நம்ம முன்னோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்கிறோமா என்பது சந்தேகமே. நாம் எவ்வளவுதான் ஸ்ரத்தையாக நீர்த்தார் கடன் தீர்க்க காரியங்கள் செய்தாலும், அதில் ஏதேனும் சிறு குறை ஏற்பட்டாலும், அது பித்ரு தோஷத்திற்கு வழிவகுக்கும்.
விளைவு, பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதிலிருந்து விடுபட, நரசிம்மரின் பாதங்களை பணிவதை தவிர வேறு உபாயம் இல்லை. எப்படிப்பட்ட பித்ரு தோஷம், சாபத்தையும் நரசிம்மர் தீர்த்து வைப்பார்.

வீட்டில், லட்சுமி நரசிம்மர் படம் வைத்து, அதற்க்கு மலர் சூட்டி, பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலை வேளைகளில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை தினமும் சொல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் சொல்லி வர, எப்பேர்ப்பட்ட பித்ரு சாபமும் முடிவுக்கு வரும். புரட்டாசி மாதத்தில் வரும், மஹாளய பட்ச காலத்தில் நரசிம்மரை வழிபடுவது மிகவும் சிறப்பு.
நரசிம்மரை வழிபாடும் போது கீழ்கண்ட ஸ்லோகத்தை சில வேண்டும்.

மாதா நரஸிம்மா பிதா நரஸிம்மா
ப்ராதா நரஸிம்மா ஸகா நரஸிம்மா
வித்யா நரஸிம்மா த்ரவிணம் நரஸிம்மா
ஸ்வாமி நருஸிம்மா ஸகலம் நரஸிம்மா
இதோ நரஸிம்மா ப்ரதோ நரஸிம்மா
யதோ யதோ யாஹி ததோ நரஸிம்மா
நரஸிம்ம தேவாத் பரோ நகஸ்சித்
தஸ்மான் நரஸிம்ம சரணம் ப்ரபத்யே

சமஸ்கிருதம் தெரியாதவர்கள், இந்த துதியை தமிழில்  சொல்லலாம்.

நரசிம்மனே தாய். நரசிம்மனே தந்தை.
சகோதரனும் நரசிம்மன் தோழனும் நரசிம்மனே
அறிவும் நரசிம்மனே செல்வமும் நரசிம்மனே.
எஜமானனும் நரசிம்மனே எல்லாமும் நரசிம்மனே.
இந்த லோகம் முழுவதும் நரசிம்மனே பரலோகத்திலும் நரசிம்மனே.
எங்கெங்கும் செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே.
நரசிம்மனைக் காட்டிலும் உயர்த்தவர் ஒருவரும் இல்லை.
அதனால் நரசிம்மனே உம்மைச் சரணடைகிறேன்.

48 நாட்கள் முடிந்த பிறகும் இந்த வழிபாட்டை தொடர்ந்தால், இன்னும் சிறப்பு. நரசிம்மர் உக்ர மூர்த்தி என்பதால், அவரது படத்தை வீட்டில் வைத்து வழிபடுவோர், மிக சுத்த பத்தமாக இருக்க வேண்டும். இவரை வழிபாடும் 48 நாட்களிலாவது அசைவ வாடையே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிகரெட், மது பழக்கம் அறவே கூடாது. பெண்கள், மாத விலக்கு நாட்கள் தவிர பிற நாட்களில் இவரை வழிபடலாம்.

Sharing is caring!