பித்ருக்களின் நல்லாசி தரும் ஆடிஅமாவாசையின் சிறப்புக்கள்..!

இறந்த நம் மூதாதையர்கள் பிதுர்கள் ஆகின்றனர். அவர்களுக்கு ஒரு உலக ஆண்டு என்பது ஒரு நாள் ஆகும். அவர்களுக்கும் பசி, தாகம் எல்லாம் உண்டு. அதை தீர்க்க வேண்டியது பின்காமிகள் கடமை ஆகும்.

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, பிறந்த குழந்தைகள் நிலைக்காமல் போவது, மற்றும் மன நோய் போன்ற துன்பம் ஏற்படுத்துவதும் உண்டு. தீராத கடும் வயிற்று வலி போன்ற உபாதைகள் கூட ஏற்படும். பிதுர் தோசம் மற்றும் சாபம் நீங்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு தினம் உணவு அளித்த பயனை பெறலாம். அவர்கள் தாகம் அடங்கி, நல்லாசி வழங்குவர். குடும்பத்தை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்து வருவர். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய அமாவாசைகள் தர்பணம் செய்ய உகந்த நாட்கள் ஆகும். இந்த நாட்களில் எதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அங்கு அமர்ந்து இருக்கும் வேத நெறியாளர் அறிவுரை பெற்று பித்ரு வணக்கமும், தானமும் செய்து, பித்ருக்களின் நல் ஆசியுடன் அனைத்து சம்பத்களும் பெற்று வாழ வேண்டும்  என்பதை பெரியோர்கள் வலியுறுத்தியுள்ளனர் இந்தப் பழக்கம் இதுவரை இல்லை என்றால், இப்போதே ஏ‌ற்படு‌த்‌திக் கொள்ளுங்கள். வாழ்வில் எல்லா நலமும் பெற்று இருங்கள்.

Sharing is caring!