பித்ரு சாபம் போக்கும் மஹாளய பட்சம்!

மஹாளய பட்சம் என்பது, ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மாத  தேய்பிறை காலத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.  பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல், அமாவாசை முடிய பதினைந்து நாட்கள் பித்ரு பூஜை செய்ய வேண்டிய நாட்களாகும். மேற்கண்ட பதினைந்து நாட்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும், ஆக இரண்டு முறை, தர்ப்பணம் செய்வது சிறப்பு.

மஹாளய பட்ச காலத்தில், மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாட்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு, இந்நாட்களில் தர்ப்பணம் விட முடியாதவர்க,ள் மற்ற ஏதாவது ஒரு நாளில், மஹாளய பட்சத்திற்குள், தர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது நம் வீட்டை சேர்ந்த அமமர் ஆன முன்னோருக்கு திதி கொடுக்க வேண்டும்.

மஹாளய பட்ச காலத்தில், நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காக காத்திருப்பார்கள் என்பது ஐதீகம். மஹாளய பட்ச தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன், நமது வாழ்க்கை சிறப்படையும்.
இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட, இந்த மகாளய காலத்தில், பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும்.  வீட்டில் காலம் சென்ற மூதாதையரின் படம் இருக்குமானால், அதன் முன் இக்காலத்தில். தினம் தினம் ஏதாவது ஒரு அன்னம் செய்து, படையல் இட்டு, வழிபாடு செய்யலாம்.

பிடித்த பலகாரங்களை செய்து, அவர்களுக்கு படைத்து, எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.முன்னோர்களை நினைத்து,  ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து, அவர்களுக்கு துணிமணி வழங்கினால்,   முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்குவர். பித்ரு சாபம் இருந்தால் அது முழுவதும் நீங்கும்.
மூதாதயரை நினைத்து, காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில், அல்லது தென் கிழக்கு பாகத்தில், அன்னம் வைத்து வழிபட்டால், மிக நன்மைகள் கிடைக்கும்.

Sharing is caring!