பித்ரு தோஷம் இலகுவில் நீங்கிவிட செய்ய வேண்டிய மகத்தான பரிகாரங்கள்…!

பித்ரு தோஷம் தீர்ந்து நற்பலன்கள் ஏற்படுவதற்கான சிறந்த பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிவன் அபிஷேகம்:தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண், பெண் இருவரும் தங்களின் முற்பிறவியில் தந்தைக்கான ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்களாகவும், கார்த்திகை மாதத்தில் பிறந்த ஆண், பெண் இருவரும் முற்பிறவியில் தங்களின் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால், பித்ரு தோஷம் பெற்றவர்களாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

இத்தகைய காரணங்களால் ஏற்படும் பித்ரு தோஷத்தை போக்க, கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.ஒரு அமாவாசை தினத்தில் 100 கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு அந்த சந்தனத்தை உரசி எடுத்து, அந்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும்.சிவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.சிவன் கோவிலில் மேற்கூறிய பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, ஒரு அகத்திக்கீரை கட்டு, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தில் ஒரு பசு மாட்டிற்கு உண்ணக் கொடுக்க உங்களின் பித்ரு தோஷம் நீங்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 அமாவாசை தினத்தில் செய்வதால் பித்ரு தோஷங்கள், சாபங்கள் முழுமையாக நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படத் தொடங்கும்.

Sharing is caring!