பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம், கையாள்வது எப்படி

குழந்தை பேறு பெண் இனத்திற்கு கிடைத்திருக்கும் வரமாகும். ஆனால் கர்ப்ப காலங்களில் கிடைக்கும் கவனிப்பு சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் பிரசவித்த பெண்கள் அநேக மன அழுத்ததிற்கு ஆளாகி குழந்தை மற்றும் தன்னையும் கவனிக்க இயலாமல் போய் தவிக்கின்றனர். இந்த சூழலை எவ்வாறு சமளிக்கலாம் என பார்க்கலாம்.

பிரசவித்த பெண்ணிற்கு, மன அழுத்தம் ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். இந்த மன அழுத்தம் பொதுவாக சில நாட்கள்  அல்லது பல வாரங்கள் தொடரலாம். இந்த மனம் சார்ந்த அழுத்தம் ஏற்பட காரணம் ஹார்மோன் மாற்றம் என சொல்லப்படும் வளர்சிதை மாற்றம்,  குழந்தையை பெற்றெடுக்கும் போது உண்டாகும் பெண்மையைின் அடையாளமான ஈஸ்ட்ரோஜன் மற்றும் கருப்பை இயக்குநீர் சுரப்பியில் ஏற்படும் மாற்றம் போன்றவையாகும்.

அதிக நேரம் குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு,   மிகக் குறைந்த தூக்கம், மார்பகங்களில் ஏற்படும் வலி, பிரசவத்தின் போது போடப்பட்ட தையலால் உண்டாகும் உறுத்தல்கள், இவை பெரும்பாலும் தாய்மை மற்றும் அதனுடன் வரும் பொறுப்புகளை சமாளிக்க முடியாமல் போகும் உணர்வைத் தருகின்றன.
இத்தகைய சூழலில் பிரசவித்த‌ பெண்ணுக்கு கட்டாயம் சரியான அளவு தூக்கம், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள், மற்றும் குடும்பத்தினருடைய ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். இவ்வாறு மட்டுமே , குழந்தை பெற்ற பின்னர் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.


குழந்தை தூங்கும் நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் போட முயற்சி செய்யுங்கள். தாயின் போதுமான ஓய்வு அவரது உணர்ச்சி மற்றும் உடல் நலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். குழந்தை பெற்ற சமயத்தில்  குடும்பத்தாருடைய உதவிகள் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கான ஓய்வு நிச்சயப்படுத்தப்படுகிறது.


அடிக்கடி சிறிய அளவில் உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு சாப்பிடுவதனால் உடல்  சோர்வடைவது தடுக்கப்படுவதுடன் குழந்தைக்கான தாய்ப்பாலையும் தேவையான அளவு கொடுக்க முடியும். மேலும் அவ்வப்பொழுது பழங்கள், வேக வைத்த காய்களை சாப்பிடுவதும் கூட உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவிடும்.

சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்தல். கொஞ்சம் வேகமாக நடைபயிற்சி செய்தல், மூச்சுப்பயிற்சி செய்தல், குழந்தையுடன் பேசுதல் மற்றும் விளையாடுதலால் தாயின் உடல் ஆரோக்கியத்தோடு, மன ஆரோக்யமும் மேம்படும்.

கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது, அந்த பெண்ணின்  கணவரது ஆதரவு மதிப்புமிக்கதாகும். இந்த நேரங்களில் பெண்கள் அதிகப்படியான சோர்வு, உணர்ச்சிக் கொந்தளிப்பு மற்றும் மன அழுத்ததிற்கு ஆளவர். அந்த சூழ்நிலையில்  ஒரு புதிய குழந்தையுடனான‌  உறவுகளை சிறந்த முறையில் கையாலும் வகையில் கணவரின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

குழந்தை பிறப்புக்கு பின்னர் முறையாக மருத்துவ ஆலோசனை பெறுவது, சரியான மருந்துகளை எடுத்துக் கொள்வது , அதனை தவறாமல் சாப்பிடுவதும், புதிதாக‌ குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் மன மற்றும் உடல் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவிடும்.

Sharing is caring!