பிரதோஷம்… குரு பார்க்க கோடி நன்மைகள்..!

இன்று வியாழன்  பிரதோஷம்.  குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு திசை நடப்பவர்களும், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்களும் கிரக தோஷத்தால் ஏற்படும் தீமைகள் குறைய சிவப்பெருமானைச் சரணடையுங்கள். குருவின் பார்வையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

இரவு ஆரம்பமாவதையே பிரதோஷ காலம் என்கிறோம். உதயத்தில் சிருஷ்டியும், பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றது. இந்த இரவு நேரங்களில் மனி தர்களும், சக ஜீவராசிகளும் ஒடுங்கிகொள்கின்றன. இக்காலமே சித்தத்தை ஒரு முகப்பட வைக்க சிறந்த காலம் என்கிறார்கள் முனிவர்களும், ரிஷிகளும், ஞானி களும்..

காலை நேரங்கள் ஹரிஸ்மரணையும், மாலை நேரங்கள் சிவஸ்மரணையும் செய்ய உகந்த காலம் என்று சொல்கிறார்கள்.  பிரதோஷ காலம் சூரிய அஸ்த மனத்தோடு  தொடங்குகிறது. பிரதோஷ காலத்தில் சிவப்பெருமான் அகிலம் முழுவதையும் தன் வசம் ஒடுக்கி நர்த்தனம் புரிவதாக  ஐதிகம். அப்போது நாம் வழிபட்டால் சிவனின் அருளை தடையின்றி பெறலாம். சிவனை வணங்கும் வழிபாட்டு முறைகளில் மிகச் சிறப்பாக  சொல்லப்படுவது பிரதோஷ வழிபாடு.

ஒரு பிரதோஷ வழிபாடு ஆயிரம் நாள்கள்  லிங்கத்தைப் பூஜித்த பலனைத் தரும். அறிந்தும் அறியாமலும் செய்த  பாவங்கள் நீங்க மனம் உருக சிவனை நினைத்து பிரதோஷ வழிபாடு செய்து  மனம் ஒன்றுபட்டு அகிலனை வணங்கி னால் செய்த பாவங்கள் நீங்கி  மலை போல் வந்த பிரச்னைகள் பனி போல் வில கும் என்கிறார்கள்.

பிரதோஷ வழிபாடு முறையான வழிபாடாக இருந்தால்  குடும்பத்தைப் பிடித் திருக்கும் வறுமை என்னும் பிணி தீரும். செல்வம் வீட்டில் தங்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும். கடன், வறுமை, தரித்திரம், எமபயம் நீங்கும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

இறைவனை நினைந்து உணர்ந்து நோற்பார் மறு பிறப்பில் தன்வந்தராக இனிது வாழ்வார்கள் என்கிறது திருக்குறள் ஒன்று. பிரதோஷ காலமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை  அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்யுங்கள். போகும் போது மறக்காமல் அருகம்புல் மாலையும்,  அபிஷேகத் துக்கு பாலும் வாங்கிச்செல்லுங்கள்.  ஓம் நமசிவாயா…

Sharing is caring!