பிறந்த மாதத்தின் படி உங்கள் ஆன்மாவுடன் தொடர்புடைய சக்திவாய்ந்த மிருகம் எது தெரியுமா?

செல்டஸ் என்பவர்கள் அணிமிஸ்ட்கள், அவர்கள் இயற்கையின் சக்திகளை கௌரவித்தனர்.

அவர்களை பொறுத்தவரை மனிதர்கள், விலங்குகள், மரங்கள், ஆன்மாக்கள் என அனைத்தும் சேர்ந்ததுதான் இயற்கை. ஏனெனில் அவர்கள் இயற்கையின் பல்வேறு அம்சங்களில் தெய்வீக வெளிப்பாட்டைக் கண்டனர்.

விலங்குகளின் உலகத்தை பொறுத்தவரை பௌர்ணமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

செல்டிக் சித்தாந்தத்தை பொறுத்த வரையில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று கூறப்படுகிறது.

இவர்களின் கருத்துப்படி நீங்கள் பிறந்த மாதத்தின் படி உங்களுக்கு லூனார் செல்டிக் விலங்கு அடையாளம் இருக்கும். இதன்மூலம் உங்கள் ஆன்மாவுக்கும், ஒரு மிருகத்திற்கும் தொடர்பு இருக்கும். அந்த மிருகம் எதுவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

டிசம்பர் 24 – ஜனவரி 20

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்புடைய மிருகம் மான் ஆகும்.

இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களையும், ஆசைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இலட்சியத்தின் மீது எப்பொழுதும் இவர்களுக்கு எப்பொழுதும் கவனம் இருக்கும். இவர்களின் இலட்சியத்திற்கும் இவர்களுக்கும் இடையில் எதையும் வர விடமாட்டார்கள். மற்றவர்கள் முடியாது என்று ஒதுக்கும் காரியத்தை செய்து முடிப்பதுதான் இவர்களுக்கு மனநிறைவை தரும்.

ஜனவரி 21 – பிப்ரவரி 17

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கான மிருகம் பூனை ஆகும். மிகவும் வேகமான செயல்பாடுகளை கொண்ட இவர்கள் தர்க்கரீதியான சிந்தனைகளிலும், பகுத்தறிவிலும் சிறந்தவராக இருப்பார்கள்.

இவர்களின் ஆறாவது உணர்வு எப்பொழுது எப்பொழுதும் சிறப்பாக இருக்கும், மற்றவர்களை பார்க்கும் போதே இவர்கள் அவர்களின் ஆன்மாவைத்தான் பார்ப்பார்கள்.

வாழ்க்கை மீதான பார்வை இவர்களுக்கு எப்பொழுதும் வித்தியாசமானதாக இருக்கும்.

மார்ச் 18 – ஏப்ரல் 14

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கான செல்டிக் மிருகம் நரி ஆகும். அதைப்போலவே இவர்களும் தந்திரமானவர்களாவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.

தன்னை சுற்றியிருப்பவர்களுடன் எப்படி வேலை செய்ய வேண்டும், எப்படி வேலை வாங்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

இவர்களின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் அனைவரையும் இவர்களை நோக்கி ஈர்க்கும்.

ஏப்ரல் 15 – மே 12

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்புடைய மிருகம் பசு ஆகும். இவர்கள் அதனைப்போலவே வலிமையாகவும், நிலையாகவும், நம்பகத்தன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

உங்களின் கவலைகளை சொல்லவும், ஆறுதல் தேவைப்படும் போதும் இவர்கள் தங்கள் தோள்களில் உங்களை தாங்கிக்கொள்வார்கள். நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் இவர்கள் ஒருபோதும் உங்களிடம் பொய் கூறமாட்டார்கள். இவர்களிடம் உங்களுடைய எந்த ரகசியத்தையும் தாராளமாக கூறலாம்.

மே 13 – ஜூன் 9

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் தேதிக்கான மிருகம் கடல் குதிரை ஆகும். இவர்கள் மிகவும் நெகிழ்வானவர்களாகவும், வளமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

அதிபுத்திசாலியான இவர்கள் நிதி மற்றும் சட்டம் தொடர்பான காரியங்களில் சிறப்பாக செயல்படுவார்கள். புத்திக்கூர்மை அதிகமிருக்கும் இருக்கும் இவர்களுக்கு நினைவாற்றலும் அதிகமிருக்கும்.

ஜூன் 10 – ஜூலை 7

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்புடைய மிருகம் குருவி ஆகும். இவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் புதிய கண்ணோட்டத்துடன் இருப்பார்கள். புதிய சிந்தனைகளை கொண்ட இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவார்கள். அனைவரின் மீதும் அக்கறை கொண்ட இவர்கள் தன்னை சுற்றியிருப்பவர்களையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

ஜூலை 8 – ஆகஸ்ட் 4

இவர்களின் ஆன்மாவுடன் தொடர்புடைய மிருகம் குதிரை ஆகும். அதனைப்போலவே இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள். துடிப்பான இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியை பரப்புபவராக இருப்பார்கள். அனைத்தையும் போட்டியாகவே பார்க்கும் இவர்கள் அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் தோற்றம் அனைவரையும் கவரும் விதத்தில் வசீகரமானதாக இருக்கும்.

ஆகஸ்ட் 5 – செப்டம்பர் 1

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கான மிருகம் மீன் ஆகும். இவர்கள் ஆழமான சிந்தனைகள் உடையவர்களாக இருப்பார்கள். தொலைநோக்கு பார்வை கொண்ட இவர்கள் வாழ்க்கை மீது எப்பொழுதும் அதிக கவனத்துடன் இருப்பார்கள். கலைத்துறையில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

செப்டம்பர் 2 – செப்டம்பர் 29

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்புடைய மிருகம் அன்னப்பறவை ஆகும்.

இவர்கள் மற்றவர்களை தங்களின் பேச்சு மூலமாகவே வசீகரித்து விடுவார்கள். அன்னப்பறவையை போலவே வசீகரமான தோற்றம் கொண்ட இவர்கள் தூய மனதுடன் இருப்பார்கள். காதலில் சிறந்து விளங்கும் இவர்களின் முக்கியமான சிறப்பு குணம் பொறுமை ஆகும்.

அக்டோபர் 28 – நவம்பர் 24

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்புடைய மிருகம் ஓநாய் ஆகும். இவர்களின் வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தம் இருக்கும்.

தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், அதனை மற்றவர்களை புரிந்து கொள்ள வைப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.

எந்தவொரு சவாலில் இருந்தும் இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். அனைத்து போராட்டத்திலும் போர்வீரன் போல செயல்படும் இவர்கள் போட்டியென்று வந்துவிட்டால் தனக்கு விருப்பமானவர்கள் என்றுகூட பார்க்கமாட்டார்கள்.

நவம்பர் 25 – டிசம்பர் 23

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஆன்மாவுடன் தொடர்புடைய மிருகம் கழுகு ஆகும். தங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும், என்ன சாதிக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு தெளிவான பார்வை இருக்கும்.

ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால் அதனை முடிக்கும் வரை இவர்களுக்கு ஓய்வென்பது கிடையாது.

தனது புத்திக்கூர்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள்.

Sharing is caring!