புகழ், செல்வம், ஆயுள் அழகு தரும் குலஸுந்தரி நித்யாதேவி

நீடித்த புகழ், நிலையான செல்வம், பூரண ஆயுள், அழகு போன்ற சிற்றின்பங்கள் எல்லாமே மாயை என்று தோன்றும் போது தான் அம்பிகையை சரணடைந்து பேரின்பத்தை அடைய விரும்புவோம். பணம் வேண்டும், பதவி வேண் டும் என்று நினைப்பவர்களுக்கும், கல்வியில் உயர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும்  துணை நிற்கிறாள் குலஸுந்தரி. செல்வம் தங்கவும் மேலும் மேலும் சொத்துக்கள் சேரவும் இவளை வேண்டினால் வரம் தருவதோடு பேரின்பம் அடைவதற்கான வழிகளையும் தருவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மாணாக்கர்கள் நினைவாற்றல் அதிகரிக்க இவளை வழி படலாம் பயன் உண்டு. இவளை வழிபடுபவர்கள் லஷ்மி தேவியையும், ஸரஸ்வதியையும் தனியாக வழிபட வேண்டியதில்லை. அவர்கள் இருவருமே குல ஸுந்தரிக்கு இரண்டு பக்கத்திலும் நின்று சாமரம் வீசிக்கொண்டிருப்பதால் அவர்களை விரும்பினால் கிடைக்கும் பலன்களையும் குலஸுந்தரியே அளிக்கிறாள்.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து  கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  வளர்பிறை நவமி தேய்பிறை சப்தமி திதியில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி குலஸுந்தரி. அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி குலஸுந்தரியை வணங்கினால் கல்வி, செல்வம், அழகு என சகலாமானதையும் அள்ளித்தருவாள்.

குலஸுந்தரி:
குண்டலினி சக்தியைக் குறிப்பதே குலஸுந்தரி. திதி நித்யாதேவிகளில் ஒன்பதாவது இடத்தில் வாசம் செய்கிறாள். தாமரை போன்று ஆறு திருமுகங்களை கொண்டு ஒவ்வொரு முகத்திலும் சிவனைப் போன்று முக்கண்களைக் கொண் டிருக்கிறாள். இவளது திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க  ஜப மாலை, புத்தகம், எழுத்தாணி, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், சங்கு, வரத முத்திரை ஏந்தி தரிசனம் தருகிறாள்.

தேவர்களும், கந்தர்வர்களும் இவளைச் சுற்றி இவள் புகழ் வாடிய வண்ணம்  இருக்கிறார்கள். யட்சர்களும், அசுரர்களும் கூட இவளது அருளை வேண்டி  நிற்கிறார்கள். தாமரை மலரில் வீற் றிருக்கும் இத்தேவியை வணங்கி செல்வத்தையும் சமூகத்தில் கெளரவத்தையும், கல்வியில் மேன்மையையும் பெறுவோம்.
மூலமந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

Sharing is caring!