புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக செய்ய வேண்டிய பரிகாரம் இது தானாம்…!

செவ்வாய் தோஷம் கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது.உண்மையில் செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம்.இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் நமது முன்னோர்க்ள அடிக்கடி சொல்வார்கள்.லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.சிலருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால்க புத்திர பாக்கியம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.அந்தவகையில் தற்போது செவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெற கீழ் கண்ட பரிகார முறைகளை பின்பற்றினாலே போதும். பரிகாரம்: 100 கிராம் தரமான துவரம் பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த துவரம் பருப்புகளை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள்.ஒரு தூய்மையான வெள்ளைத் நிற காடா துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக துவரம் பருப்புகளை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும்.பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும்.அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, செவ்வாய் பகவானை மனதில் நினைத்து செவ்வாய் பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும்.பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது துவரம் பருப்புகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும்.

Sharing is caring!