புரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் பூசம் நட்சத்திரக்காரர்கள்…

பூசம் நட்சத்திரத்திரக்காரர்கள் புஷ்யம் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவை மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது. பூசம் நட்சத்திரம் சிறப்பு மிக்க நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.

பூசம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் சூரியபகவானின் அம்சத்தை கொண்டிருப்பீர்கள். இயல்பாகவே எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வீர்கள். பணியிடங்களில் தலைமை தாங்கும் திறமையைப் பெற்றிருப்பீர்கள். எதையும் வித்தியாசமாக நோக்கும் கலையுணர்வு பார்வையைப் பெற்றிருப்பீர்கள்..

பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் புதனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். வைராக்கியம் மிக்கவர்கள் என்பதால் தோல்வியைச் சட்டென்று ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எல்லோரிடமும் ஆசை கொண்டிருப்பீர்கள். பாசத்துடன் நீங்கள் பழகுவதால் எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள் கடுமையான  உழைப்பினால் மட்டுமே குறிக்கோளை அடைய முடியும் என்பதை உணர்ந்தவர்கள். தலைமை பண்பில் வழி நடத்திச்செல்லும் குணத்தைக் கொண்டவர்கள் நீங்கள். இயல்பாகவே இறை பக்தி கொண்டிருப்பீர்கள்…

பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் செவ்வாயை அதிபதியாக கொண்டவர்கள். சுக போகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதால் சுயநலத்தோடு செயல்படுவீர்கள். தர்மம், நேர்மை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்..  உங்கள் சுகத்துக்காக மற்றவரை துன்புறுத்துவதில் கூட தயங்க மாட்டீர்கள்..

பூச நட்சத்திரங்கள் இயல்பாகவே திறமை மிக்கவர்களாக இருப்பீர்கள்.. புத்திக் கூர்மை கொண்டவர்கள் என்பதால் கற்கும் அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். புரிந்து செயல்படும் குணத்தைக் கொண்டிருப்பதால் திறமையால் பிறரை கவர்வீர்கள்… அடக்கமாய் இருப்பீர்கள். ஆனால் யாராவது உங்களை சீண்டினால் பொங்கி எழவும் தயங்க மாட்டீர்கள்..

Sharing is caring!