புற்றுநோயும் – சிகிச்சைகளும் – நோயை தடுக்கும் மூலிகைகளும்

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ந்துவிட்ட இந் காலகட்டத்தில் புற்று நோயை இனம் கண்டு சிகிச்சை அளித்து குணப்படுத்த வியக்க வைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் கண்டு பிடிக்கப்பெற்று சிகிச்சை அளிக்கப் பெற்று வருகின்ற நிலையில் நோயின் தீவிரம் காரணமாக தினமும் அதிகமானோர் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந் நோயை ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து.

இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப் படுத்திவிடலாம் என வைத்திய நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் முற்றிய நிலையில் நோய் கண்டு பிடிக்கப் பெற்றால் குணப்படுத்துவது கடினமாகிவிடுகின்றது. ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் இது ஒரு ஆபத்தான உயிர் கொல்லி நோயாக உடம்பில் புற்றெடுத்து குடிகொண்டு விடுகின்றது.

இந் நோய் வந்தபின் சுகப்படுத்துவதைவிட வராது தடுக்கும் தடுப்பு மருந்துகள் ஊசிகள் மற்றைய கொடிய நோய்களுக்கு இருப்பதுபோல் எதுவும் இதுவரை இந் நோய்க்கு இருப்பதாக தெரியவில்லை.

புற்றுநோய் என்றால் என்ன?
உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப் பெற்றது. புற்றுநோய் என்பது உடம்பில் உள்ள கலன்கள் (செல்கள்) கட்டுப்பாடு (ஒழுங்கு) இல்லாது பிரிந்து பெருகுவதால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும்.

இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறன. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்களையும் தோன்றுகின்றன. அத்துடன், உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே (தங்கி) மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. இதனால் உடம்பில் கழலைகள், கட்டிகள் தோன்றுகின்றன.

எல்லாக் கழலைகளும் (டியூமர்), கட்டிகளும் புற்று நோய் உடையன அல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் தீங்கான கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

தீங்கான கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.
இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீருடன் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) (metastasis) என்பர்.

இது ஒரு வகையான பரம்பரை அலகுகளில் (gene or in chromosomal DNA region) ஏற்படும் மாற்றங்களினால் அல்லது டி.என்.ஏ க்களில் பிறழ்வுகளை தூண்டும் பொருள்களினால் (புற்று நோயூட்டி or carcinogen) அல்லது தீ நுண்மங்களினால் (virus, ex Human Papilloma virus) ஏற்படும் நோய் ஆகும்.

உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் (Ex. Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் தடுக்கும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளினால் உயிரணு பிரிதல் கட்டுப்பாடுகள் அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லமால் ஊக்கமடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது.

இவ்வாறு தோன்றும் புற்று செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் (லிம்ப் நொட்ஸ்) வழியாக உடலின் மற்ற பாகங்களை அடைந்து நிவாரணம் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு செல்கின்றன. இவ்வாறு புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) எனப்பெயர்.

அண்மைய ஆய்வுகளில் குறு ஆர்.என்.ஏ (microRNA) க்களில் ஏற்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (cancer stem cells, Glioblastoma stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள்.

இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதரண குருத்தணுக்களில் (normal stem cells, ex. neuronal stem cells) உள்ள கல குறிகைகளில் (cell signaling pathway) ஏற்ப்படும் பிறழ்வுகளால் புற்று குருத்தணுக்களை தோற்றுவிக்கின்றன.

புற்று நோய் சில வேளைகளில் ஒரு குறிபிட்ட இடத்தில் கட்டியாக வெளிப்படுவதை தீங்கற்ற கட்டி அல்லது பெனின் (benign) கட்டி என அழைக்கப்படும். அவை தன்னிடத்திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை ஆகும்,

மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது. பொதுவாக இக்கட்டிகளை குறிபிட்ட இடத்தில் அகற்றி விட்டால், புற்று நோயின் தாக்கம் இல்லை என நம்பலாம். பின்னாளில் கண்ணுற்ற புற்று குருத்தணுக்களால் மீண்டும் புற்று தாக்கும் என தெரிகிறது.

மிக குறைந்த அளவில் உள்ள புற்று குருத்தணுக்கள் மறுபடியும் புதுபித்து (self=renewal), பெருகி புற்று செல்களாக உருமாற்றம் அடைய வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. இக்கரணியத்தால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று குருத்தணுக்களையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அதே வேளையில் சாதரண குருத்தணுக்களை பாதுகாக்கும் வண்ணம் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன.

ஆனால் சில நோய்கள், எடுத்துக்காட்டாக இரத்தப் புற்றுநோய், கட்டி இல்லாமலேயே தாக்கும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயை தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப் பிரிவினை ஆன்கோலோஜி புத்தாக்கவியல் (புற்றுநோயியல்) என்று அழைக்கப்படுகிறது.

புற்று நோய் மானிடரை எந்த வயதிலும் தாக்கலாம் என்றாலும் கூட, வயது ஏற ஏற அதற்கான வாய்ப்புகள் வேகமாக கூடுகின்றன புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கன் கான்செர் சொசைடி நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர். புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது.

பொதுவாக நிறப்புரியில் ஏற்படும் பிறழ்வுகளால் அல்லது மாற்றங்களால், ஒரு உயிரணு புற்று செல்களாக மாற்றப்படும். இந்நிகழ்வுக்கு உருமாற்றம் (transformed cells) எனப்பெயர். இவ்வாறு உருமாற்றம் அடைந்த உயிரணுக்கள் கட்டுப்பாடு இன்றி பல்கி பெருகி புற்றணுவை உருவாக்குகிறது இவ்வகையான ஒவ்வாத இயல்பு மாற்றங்களுக்கு புற்று ஊக்கிகள், எ.கா.புகையிலை புகை, கதிர் இயக்கம் , வேதியியல் பொருள்கள், அல்லது தொற்றுநோய் பரப்பும் பொருட்கள் காரணமாக அமைகிறது.

மேற்கூறிய பொருட்கள் டி.என்.ஏ நகலாக்கம் அல்லது அச்செடுத்தலின் போது பல்வேறு வகையான பிறழ்வுகளை தூண்டுவதால் புற்று செல்கள் தோன்றுகின்றன. சில வேளைகளில் புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். இந்த புற்றுநோயின் பாரம்பரியத்திறன்ஆனது புற்று ஊக்கிகளுக்கும் இடத்தையளிக்கும் ஜெனோம்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான இடைவினைகளால் வழக்கமாக பாதிப்படைகின்றன. நோய் தோற்ற வகையினை கண்டறியும் புதிய கண்டுபிடிப்பான மெத்தைலேற்றம் மற்றும் குறு ஆர்.என்.ஏ தற்போது மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

பொதுவாக புற்று உயிரணுக்களில் இரு வகையான மாற்றங்களை காணலாம்.
1. மிகையான உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் (Oncogene)

2. புற்று உயிரணுக்களை கட்டுப்படுத்தும் மரபணுவில் (tumor suppressor genes) ஏற்படும் பிறழ்வுகள்.

முதல் வகையில், உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் வெளிப்பாடு வெகுவாக்கப்படுவதால் (Bcl2) அவைகள் கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஊக்கவிக்கும். இவ்வகையான மரபணுக்கள் நமது உடலில் நடைபெறும் உயிரணு இறப்பை அல்லது திட்டமிடப்பட்ட உயிரணு இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை தடுக்க வல்லவையால், உருமாறிய உயிரணுக்கள் பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.

இரண்டாவது நிகழ்வில், இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளால், புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.

புற்று நோயின் அறிகுறியாக கட்டிகள் அமைந்தாலும், அதனை உறுதிபடுத்த திசுக்கள் ஆய்வுக்கு உட்ப்படுத்தபட்டே புற்று உள்ளதா? இல்லையா ? என அறியப்படும்.

வீரிய புற்றுகள் (Malignant tumor) கதிரியயக்க படமாக்கத்தில் மூலம் அறியலாம். ஒரு திசுவின் இழையவியலுக்குரிய சோதனை உடல் திசு ஆய்வு மூலம் அதற்குரிய நோயியல் மருத்துவரின் உதவியுடன் நோயை அறுதிசெய்துகொள்வது அவசியமாகும்.

புற்றுநோயின் வகை, இடம் மற்றும் நிலையைப் பொறுத்து மிக்க புற்றுநோய்களுக்கும் சகிச்சை அளிக்கலாம், சில வகைகளை குணப்படுத்தலாம். ஒருமுறை அறுதி செய்தபின், பொதுவாக புற்றுநோய் அறுவை சிகிச்சை, கெமொதெராபி (வேதிச்சிகிச்சை), கதிரியக்கச்சிகிச்சை ஆகிய மூன்று முறைகளும் அடங்கிய வகைகளில் சிகிச்சை அளிக்கலாம்.

மேலும் ஆராய்ச்சி மேம்பட்டு வருவதால், சிகிச்சை முறையும் ஒவ்வொரு வகை புற்றுநோய் வகைக்கும் ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் மாற்றமடைந்து வருகின்னறன. குறிவைத்த சிகிச்சை மருந்துவகைகளில், அவை சில கட்டிகளில் தனிப்பட்ட முறையில் சில மூலக்கூற்று பிறழ்தல்களை குறிவைத்து, மேலும் இயற்கையாக இருக்கும் கலன்களை அதிக பாதிப்பு அடையாமல் செயல் புரியும் மருந்துகளின் மேம்பாட்டில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது.

புற்றுநோயாளிகன் முன்கணிப்பு மிக்கவாறும் புற்றுநோயின் வகை மற்றும் அதன் நிலைமை, அல்லது நோயின் பரிமாணத்தை பொறுத்திருக்கும். மேலும், இழையவியலுக்குரிய தரம்பிரித்தல் மற்றும் சில குறிப்பிட்ட மூலக்கூற்று அடையாளம் காட்டிகளை முன்னிலையில் வைத்தலும், முன்கணிப்பிற்கு பயன்படுகிறது, மேலும் தனிப்பட்ட நோயாளி சார்ந்த சிகிச்சையையும் அளிக்க உதவுகிறது.

புற்று நோய் எமக்கு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

புற்றுநோய் எமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகு றிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன.
அவை:
1. குணமாகாத புண்.
2. ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு.
3. சளியில் ரத்தம் வெளிப்படுதல்.
4. கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது.
5. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல்.
6. கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம்.
7. திடீரென ஏற்படும் எடை குறைவு,
8. காய்ச்சல்.
9. மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல் (குறிப்பாக 40 வயதுக்கு மேற் பட்ட பெண்களுக்கு) .
10. உணவை விழுங்கு வதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச் சிக்கல்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்று நோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகை யிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்ற வை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற் சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந் துதல், புகைப்பிடித்தல், வறுத் த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பி டும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற் றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லா மை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. வெளி நாடு களில் இப்போது பயன்படுத்தப்பட் டுக் கொண்டிருக்கிறது.)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில்படுதல், சொரியா சிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.

(எந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்கு கூட இந்த நோய் ஏற்படலாம். ”மது அருந்தமாட்டார். புகைப் பிடிக்கவும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்து விட்டதே” என்று வருந்திப் பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.)

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?
தடுக்க முயற்சிக்கலாம். மேற் கண்ட பழக்க வழக்கங்கள் இல் லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பராக் பயன் படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

”ஹியூமன் பபிலோமாவைரஸ்” (Human Papilloma Virus – HPV) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவை களை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந் துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண் டறிய முடியும்?
முதலில் நாம் குறிப்பிட்டிருக் கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவை களில் உங்க ளுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என் பதை டாக்டர் சொல்வார். அதை வைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடி யும்.

நோயை கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்திவிட முடியுமா?
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப் படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சி க்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்று நோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப் படுத்த அதிக வாய்ப் பிருக்கிறது. இதற்கு ”பெட்டன்சியலி க்யூரபுள் கேன் சர்” என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந் ததாகும்.

புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ் வளவு நல்லதில்லை என்பது சரியா?
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்று நோய்க்கு ”மேஜர்” ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது ”சிம்பிளான” ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறன. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்று நோய்க்கான ஆபரேஷன் சற்று ”ரிஸ்க்” தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள் என்னென்ன?
மூன்றுவிதமான சிகிச்சைகள் கை யாளப் படுகின்றன.
அவை:
1. ஆபரேஷன் – (சத்திர சிகிச்சை மூலம் தாக்கப் பெற்ற உறுப்புகளை அகற்றுதல்)
2. கீமோ தெரபி – கீமோதெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்). கீமோ என்றால் மருந்து, ரசாயனம் போன்ற அர்த்தங்கள் உண்டு. தெரபி என்றால் சிகிச்சை. மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பதால் இந்தப் பெயர்.
3. ரேடியேஷன் (கதிர் பாச்சுதல் – ட்ரீட்மென்ட்) ரேடியேஷன் எனப்படும் எக்ஸ்ரே வகை சிகிச்சை.

இந்த மூன்று வகை சிகிச்சைகளுமே இப்போது நவீனமயமாகி இருக்கின்றன. ரிஸ்க்கு களை குறைக்கும் விதத்தில் ஆபரேஷன்கள் சிம்பிளாக செய்யப்படுகின்றன.
புற்றுநோய் செல்கள் பொதுவாக வேகமாக பெருகி, உடலில் பரவும்தன்மை கொண்டவை. அவைகளின் வளர்ச்சியை தடுத்து, அழிக்கும் செயலை கீமோதெரபியும், ரேடியேஷனும் செய்கிறது.

கீமோ தெரபி: பாதிக்கப்பட்டவரின் உடலில் எங்கெல்லாம் புற்றுநோய் செல் இருக்கிறதோ அங்கெல்லாம் கீமோ மருந்துகள் சென்று, அவைகளை அழிக்கும். கீமோ தெரபியில் பெரும்பாலும் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையை 6 முதல் 9 மாதம் வரை தொடருவார்கள். 3 முதல் 4 வாரத்திற்கு ஒரு ஊசி மருந்து செலுத்தப்படும்.

பின்விளைவுகள் என்பது பொதுவாக எல்லா மருந்துகளிலும் உண்டு. இதிலும் ஓரளவு இருக்கிறது. நமது உடலில் ஜீரண குழாய், தலைமுடி போன்ற சில குறிப்பிட்ட இடங்களில் திசுக்கள் நன்றாக, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும். வளரும் புற்றுநோய் செல்களை அழிக்க உடலில் செலுத்தப்படும் கீமோதெரபி ஊசி மருந்து, இந்த ஜீரண குழாய், தலைமுடி போன்ற இடங்களில் வளரும் திசுக்களையும் தாக்கி, ஓரளவு பாதிக்கச் செய்யும். இப்படி கீமோ தெரபி சிகிச்சை பெறுபவர்களின் ஜீரண குழாய் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு வாந்தி ஏற்படும். தலைமுடியும் உதிரும்.

ஆண்களுக்கு விரைப்பை திசுக்களும், பெண்களுக்கு சினைப்பை திசுக்களும் வேகமாக வளரும். விரைப்பையில் உயிரணு உற்பத்தியும், சினைப்பையில் சினை முட்டை உற்பத்தியும் நடந்துகொண்டே இருக்கும். புற்று நோயாளிகளுக்கு செலுத்தப்படும் கீமோ தெரபி மருந்துகள், ஆண் என்றால் விரைப்பை திசுக்களையும், பெண் என்றால் சினைப்பை திசுக் களையும் பாதிக்கும். இதனால் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும். பெண் களுக்கு சினைமுட்டை உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் இந்த பாதிப்புகள் அனைத்துமே தற்காலிகமானதுதான். அந்த சிகிச்சை முடிந்த பின்பு பாதிப்புகள் நீங்கி, இயல்பு நிலைக்கு வந்துவிடலாம்.

கீமோதெரபி மருந்துகளால் சில நேரம் ஈரல், கிட்னி, இதயம் போன்றவை நெருக்கடிக்கு உள்ளாகும். அதனால் இந்த சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னால் அந்த நோயாளிக்கு கிட்னி, ஈரல், இதய பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று டாக்டர்கள் பரிசோதித்துக் கொள்வார்கள்.

கீமோதெரபியில் உருவாக்கப்பட்டிருக்கும் நவீன மருத்துவம், ”டார்கெட்டட் தெரபி”. கீமோதெரபி மருந்து உடலில் எல்லா இடங்களுக்கும் சென்று, பரவியிருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்போது, சில நேரங்களில் நல்ல செல்களும் பாதிக்கப்படுவதால், புற்றுநோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் விதத்தில் டார்கெட்டட் தெரபி மருத்துவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஊசி மருந்தாகத்தான் செலுத்தப்படுகிறது. ஒருவருக்கு 6 முறை ஊசி மருந்துகள் செலுத்தப்பட வேண்டியிருக்கும். இந்த ஊசி மருந்தின் விலை அதிகம்.

ரேடியேஷன் சிகிச்சை: எக்ஸ்ரே மருத்துவ வகையை சார்ந்தது. எந்த பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த பகுதியில் மட்டும் ரேடியேஷன் கொடுத்து, புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். இதிலும் ஓரளவு பக்க விளைவுகள் உண்டு.

ஒருவருக்கு கிட்னியில் புற்று ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் ரேடியேஷன் செலுத்தும் போது அதன் மேல் பகுதியில் உள்ள சருமம், தசை, நரம்புகளைக் கடந்துதான் அந்த கதிர், புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை சென்றடையும். இதனால் கிட்னிக்கு அருகில் இருக்கும் பகுதி ஓரளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை குறைக்க, மேற்பகுதியில் ஒரே இடத்திலிருந்து கதிர்களை பாய்ச்சாமல், இலக்கை குறியாக வைத்துக்கொண்டு சுற்றுப்பகுதிகளில் இருந்தும் ரேடியேஷன் கொடுப்பார்கள்.

ரேடியம் மெட்டலிலும் ரேடியேஷன் இருக்கிறது. பெண்களுக்கு கருப்பை வாயில் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அப்பகுதியில் ரேடியம் மெட்டல் நீடிலை வைப்பார்கள். டியூப்பின் உள்ளே ரேடியம் நீடிலை வைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் செருகி வைப்பார்கள். இது சுற்றுப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆண்களுக்கு ஆண் உறுப்பில் புற்று ஏற்பட்டாலும் இதே முறையில் ரேடியம் மெட்டல் நீடிலை பயன்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துவார்கள்.

ரேடியேஷன் சிகிச்சையில் புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த பகுதிக்கு ரேடியேஷன் கொடுக்கவேண்டும் என்பதை கம்ப்யூட்டரே கண்டறிந்து, அதுவே ரேடியேஷன் கொடுக்கும். இதற்கு `கம்ப்யூட்டர் கைட்டட் ரேடியோ தெரபி’ என்று பெயர்.

இந்த நவீன சிகிச்சைகள் எல்லாம் ஆஸ்பத்திரிகளிலும் உண்டா?
பெரிய அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான நவீன சிகிச்சைகள் இருக்கின்றன. மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் சேரும்போது புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீடும் இருக்கிறதா? என்று பார்த்து, அதற்குரிய திட்டங்களில் சேரவேண்டும்.

மூன்று விதமான சிகிச்சைகளை குறிப்பிட்டீர்கள். இந்த சிகிச்சையால் நோயை குணப்படுத்திவிட்ட பின்பு, மீண்டும் முன்புபோல் இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா?
முடியும். ஆனால் சில நேரங்களில் நோய் பாதிப்பு, ஈடுசெய்ய முடியாத பாதிப்பாக இருக்கவும் கூடும். காலில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு, ஒரு காலை நீக்கிய பின்பு அவருக்கு நோய் குணமாகிவிடும். ஆனால் ஒரு காலை இழந்தது இழப்புதானே!. ஆனால் மார்பு, கன்னம், தாடை போன்றவைகளில் புற்று ஏற்பட்டு அந்தப் பகுதிகளில் ஓரளவு நீக்கம் செய்யப்பட்டாலும், பின்பு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த பகுதிகளை சீரமைத்துக் கொள்ளலாம். இந்த நோயைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலே கண்டறிந்துவிட்டால், சிகிச்சை மூலம் குணப்படுத்தி, இயல்பான வாழ்க்கையை எளிதாக தொடர முடியும்.

இந்த நோய் தொடர்பாக பெண்களிடம் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா?
பெண்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வு பெறவேண்டும். மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் வெட்கத்தோடு அதை மறைத்துவிடுகிறார்கள். முற்றிய பின்பே சிகிச்சைக்கு வருகிறார்கள். அதுபோல் கருப்பை வாய் புற்றுநோயிலும், நோய் அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் வெட்கம், தயக்கத்தை விட்டுவிட்டு இன்னும் அதிக விழிப்புணர்வோடு இந்த நோயை அணுகி குணப்படுத்த வேண்டும்.

வயதுக்கும் – புற்று நோய் குணமாகும் தன்மைக்கும் தொடர்பு இருக்கிறதா?
40 வயதில் ஒருவருக்கு புற்று நோய் வந்தால் அதன் பரவும் தன்மையும், தாக்கமும் அதிகமாக இருக்கும். அதனால் அவர் பாதிப்பை அதிகமாக உணருவார். அதே நோய் 70 வயதானவருக்கு வந்தால், அதன் பரவும் தன்மையும் தாக்கமும் குறைவாகவே இருக்கும். வயதான பின்பு புற்றுநோய் வந்தால் கொடுக்கும் மருந்துகளின் அளவும், ரேடியேஷனின் அளவும் குறைவாகும். ஆனால் தைராய்டு புற்றுநோய் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்த புற்று இளம் வயதில் ஏற்பட்டால் குணமாகிவிடும். வயதானவர்களுக்கு வந்தால், அவர்களுக்கு பாதிப்பின் தாக்கம் அதிகமாகத் தெரியும்.

“கருத்தடை மாத்திரைகளை” அதிக காலம் பயன்படுத்தும் பெண்களுக்கும், கருப்பையை நீக்கம் செய்த பின்பு ”ஹார்மோன் ரீ பிளேஸ்மெண்ட் தெரபி” பெறும் பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்படுமோ?’ என்ற சந்தேகம் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது. இதில் ஓளரவு உண்மை இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிக சக்தி வாய்ந்ததும் மலிவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் “பறங்கி அன்னமுன்ணா பழம்” அல்லது ”காட்டு அன்னமுன்ணா, ஆத்தாப்பழம்” என அழைக்கப் பெறும் பழமானாது புற்றுநோய் தடுப்பு மருந்தாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப் பழத்தினை சாப்பிடுவதன் மூலம் எமது உடம்பில் புற்று நோய் ஏற்படாத படி நோய் எதிப்பு சக்தியை பெற்றுக்கொள்வதாக அண்மைய ஆராட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தப் பழம், புற்று நோய்க்கு (கேன்சருக்கு) கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட பல ஆயிரம் மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லி பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், இந்தியாவில் கேரளாவிலும் “ஆத்தா சக்கா” (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. பலாப்பழத்தைப் போன்ற முட்களும், தோற்றமும் கொண்டதாலோ என்னவோ ‘பலா ஆத்தா’ என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப் பழத்தைப் போன்று, (சற்று அதிகமான இடைவெளியில்) முட்கள் இருக்கும். அத்துடன் அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும்கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌வாசனையுடையதாக இருக்கும்.

“காட்டு அன்னமுன்ண”வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் எமக்குத் இயற்கையாக தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்!

இந்த இயற்கையாக கிடைக்கும்(கீமோ (Chemoவினால்), பறங்கி அன்னமுன்ணா பழத்தினால்:
* கடுமையான‌குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ‘கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.

* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:
* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.

* நம் உடம்பின் ஆற்றலுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவனவாகவும், கண்பார்வையை மேம்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

* “பூஞ்சைத் தொற்று” என்று சொல்லப்படும் பங்கஸ் தொற்றுகளையும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.

* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.

Sharing is caring!