புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் ஏலக்காய்! தெரியுமா உங்களுக்கு!!!

சென்னை:
ஏலக்காயில் உள்ள பாலிபினால் என்ற ஆன்டிஆக்ஸிடன் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஏலக்காய் டீயை ருசித்து அருந்துவர். மணம் வீசும் ஏலக்காய் டீ உடலுக்கு நன்மையும் பயக்கும். இதன் நன்மைகள் குறித்து காண்போம்.

இதயப் பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஏலக்காய் டீ குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

தலைவலிக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாகும்.  தலைவலி உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம் அல்லது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மொன்று சாப்பிட்டால் தலைவலி விரைவில் குணமாகும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லது. ஏனெனில் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் நுரையீரலில் ரத்த ஓட்டம் மேம்பட்டு உயர் ரத்த அழுத்தம் குறைய பெரிதும் உதவுகிறது.

செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் குணமடையச் செய்யலாம்.  மேலும் அஜீரண கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது நீங்கும்.

ஏலக்காயில் பாலிபினால் என்ற ஆன்டிஆக்ஸிடன் உள்ளது. இது நமது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!