புற்று நோயினை அடியோடு அழிக்கும் ஒரே ஒரு பூ….!!

தோட்டத்தில் வளரும் ஃபீவர்ஃபு (டானாசெட்டம் பார்த்தீனியம்) இந்த வகையான சாதாரண பூ ஒன்று புற்றுநோயிக்கு மருந்தாகவும் மற்றும் லுகேமியா செல்களை அழிக்கும் தன்னை கொண்டது என்பதை பர்மிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

ஆம் புற்றுநோய்க்கு எதிராக போராட புதிய மருந்துகளை தயாரிப்பதற்கு இந்த செடியினை தற்போதே பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

‘காய்ச்சல் குறைப்பான்’ என்றும் அழைக்கப்படும் இந்த ஃபீவர்ஃபு நுறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றைத்தலைவலி, காய்ச்சல் மற்றும் பிற வலிகளுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

குறித்த ஆராய்ச்சியாளர்கள் இந்த தாவரத்தின் இலைகளிலிருந்து ‘பார்த்தினோலைடு’ என்ற கலவையை பிரித்தெடுத்து, புற்றுநோய் செல்களைக் கொல்லுவதில் திறமையாக இருக்கக்கூடும் என்பதற்காக ஒரு கலவையை வடிவமைத்தனர்.

மேலும் இந்த தாவரம் பூக்கும் கட்டத்தில் தான் பார்த்தினோலைடு என்ற கலவை மிக உயர்ந்த அளவில் கிடைக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஃபீவர்ஃபு செடியில் இருந்து கலவை பிரித்தெடுக்கப்பட்ட பிறகு, அது சுத்திகரிக்கப்பட்டு, புதிய வடிவமாக மாற்றப்படுகிறது, இதனால் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதற்கான திறமையான மருந்தாக இது செயல்பட முடிகிறது. ஏறக்குறைய, 76 வடிவங்கள் செய்யப்பட்டன, அவற்றில் ஒரு வடிவத்திற்கு மட்டும் நல்ல உயிர் கிடைக்கும் தன்மை மற்றும் சிறந்த மருந்தியல் பண்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு, விஞ்ஞானிகள் எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஒருவகை புற்றுநோயான நாட்பட்ட லிம்போசைடிக் லுகேமியாக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இந்த தாவரம் காணப்பட்டது.

“இந்த ஆராய்ச்சி முக்கியமானது, ஏனெனில் இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் அணுகக் கூடியதாக இருக்கும் பார்த்தீனோலைடை உற்பத்தி செய்வதற்கான வழியை இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம், மேலும் அதன் ‘மருந்து போன்ற’ பண்புகளை மேம்படுத்தி புற்றுநோய் செல்களைக் கொல்ல வழிகளையும் அறிந்து கொள்ள முடியும்.

உயிரைக் கொல்லும் புற்றுநோயை எதிர்த்து செயலாற்றும் தன்மை இந்த பார்த்தீனோலைட்டுக்கு உள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான நிரூபணம் “என்று ஆய்வின் ஆசிரியரான ஜான் ஃபோஸி கூறுகிறார்.

இந்தக் கலவையை உயிருள்ள விலங்குகள் மற்றும் பிற மனிதர்களில் பரிசோதிக்க அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Sharing is caring!