பூசம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம் இது…!

பூச நட்சத்திரம் உடையவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணிக்கு அருகிலிருக்கு விளாங்குளம்  என்னும் ஊரில் உள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர்  திருக்கோயில் வந்து இறைவனை வழிபடுவது துன்பத்திலிருந்து காக்கும்.

இத்தல மூலவர் அட்சயபுரீஸ்வரர்.. தாயார் அபிவிருத்தி நாயகி…. இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சன்னிதி கிடையாது.  சூரியனுக்கும் அவரது மைந்தனான சனிக்கும் மட்டுமே சன்னிதி உண்டு. இங்கு சனிபகவான் இத்தலத்தில் திருமணக் கோலத்தில்  தனது மனைவியரான மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் தெற்கு நோக்கி அருள்புரிகிறார்.  பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானியுடன், சனீஸ்வரர்  மனைவியுடன், சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், பிரம்மா, தட் சிணாமூர்த்தி, நந்தி, துர்க்கை, லிங்கோத்பவர், கஜலட்சுமி, நாகர், நடராஜன் சன் னிதிகள்… அமைந்திருக்கின்றன.

ஒருசமயம் எமதர்மன் பகையினால் சனிபகவானை அடிக்க சனிபகவானின் கால் ஊனமானது. நிவா ரணம் தேடி பூலோகத்துக்கு வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்துக்கு வரும்போது ஓரிடத்தில் விளாமரத்தின் வேர் தடுக்கி  அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார். அன்றைய தினம் திருதியை திதி, பூச நட்சத்திரம், சனிவாரம் இணைந்த நாள். மறைந்திருந்த பூச ஞான  வாவி தீர்த்தம் சுரந்து விழுந்த சனிபகவானை   மேலே கொண்டு வந்து சேர்த்தது.  சிவ பெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரனுக்கு காட்சித்தந்தார்.  சிவபெரு மான்  சனிபகவானின்  கால் ஊனத்தைச் சரிசெய்தார். கால் ஊனத்தை காகம் பெற்றுக் கொண்டதாலேயே சனிபகவான் காகத்தை வாகனமாக கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

மேலும் சிவபெருமான் சனிபகவானுக்கு திருமணபாக்கியத்தையும் கொ டுத்தார். மந்தா தேவி, ஜேஷ்டா தேவிகளை இங்கு மணந்துகொண்ட சனிபகவான் திருமணக்கோலத்தில் இங்கு காட்சிதருகிறார். விளாமரங்கள் நிறைந்து  மறைந் திருந்த தீர்த்தம் வெளிப்பட்டதால் இந்த ஊர் விளாங்குளம் என்று அழைக்கப் படுகிறது.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேரம் கிடைக்கும்போது இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில், பூச நட்சத்திர தினத்தில் அல்லது அட்சய திரிதியை தினத்தன்று இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால் செளபாக்  கியமாக வாழ்வார்கள். மேலும் பூச நட்சத்திரத்தன்று   சனிபகவானுக்கு 8 வித மான தேன், நல்லெண்ணெய், இளநீர், புணுகு, பஞ்சாமிர்தம், சந்தனம், பால், தயிர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்து  எட்டு முறை சுற்றீ வந்து வழிபட்டால்  வாழ்வில் அனைத்து பேறுகளையும் பெறலாம். மேலும் சனிதோஷத்தால் பாதிக் கப்பட்டவர்கள் திருமணக்காட்சியில் அருள்பாலிக்கும் சனிபகவானை வணங் கினால் சனி தோஷ பாதிப்புகள் குறையும் என்பது ஐதிகம்.

மனதில் குறையோடு இருப்பவர்கள், உடல் ஊனமுள்ளவர்கள், கடன் பிரச்னை, எதிரிகள் தொல்லை, திருமணத்தில் தடை, கால் சம்பந்தமான நோய்கள் நீங்க இத்தல இறைவன் அட்சயபுரீஸ்வரர் அருள்புரிகிறார்.

Sharing is caring!