பூமிக்கடியில் முளைத்த சிவலிங்கத்தில் வற்றாத நீருற்று -அதிசய தலம்…

ஒவ்வொரு பிறவியிலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தான் மீண்டும் மீண்டும் மனிதனை பிறக்க வைத்து அவர்களுக்கு பிரச்னைக ளையும் உண்டுபண்ணுகின்றன என்கிறது இந்துமதம். மனிதன் செய்த இத்தகைய பாவங்களை எளிதில் போக்கக்கூடிய வலிமை மிக்க முதன்மை யான கடவுள்  சிவபெருமானே.

இந்து சமயத்தில் சிவனை மும்மூர்த்திகளில் முதன்மையானவனாக குறிப்பிடுகிறார்கள். படைத்தல்,காத்தல், அழித்தல், அருளுதல், மறைத்தல் என்று ஐந்து பணிகளுக்கு அடிப்படையான ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உருவாக்கிய சிவபெருமான் அண்டம் அழிந்தாலும் நிலைத்து நிற்ப வர் என்பதால் சதாசிவன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து  பிரம்மரும் உருவானதாக வேதவியாசர் கூறுகிறார்.

இறைவனின் விருப்பப்படி ஆங்காங்கே தானாக தோன்றிய லிங்கம் சுயம்பு லிங்கம் என்றழைக்கப்படுகிறது. பாரதத்தில் இருக்கும் பழமை மிக்க    சிவாலயங்கள் பல்வேறு ஆன்மிக அதிசயங்களையும், ஆச்சர்யங்களைக் கொண்டு  இருக்கிறது. அவற்றில் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் கில் இருக்கும் திரியம்பகேஸ்வரர் கோவில்.

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாக கொண்டு அமைந்திருக்கின்றன.ஆனால் இந்த தலத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் போன்ற கடவுளின் முகங்களைக் கொண்டு அமைந்திருப்பது காணக் கிடைக்காத  தனித்துவமான சிறப்பு.

கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் கருங்கற்களால் அழகிய சிற்பஙளுடன் இக்கோயில் கட்டப்பட்டுள் ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது இங்கிருக்கும் சுயம்பு லிங்கம். மற்ற ஆலயங்களில் இருப்பது போல் அல்லாமல் தரைமட்டத்துக்கு கீழ் லிங்கம் உருவாகியிருக்கிறது.

Sharing is caring!