பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்….?

பூர்வாஷாடா என்று அழைக்கப்படும்  பூராடம் நட்சத்திரம் இரண்டு நட்சத் திரங்களைக் கொண்டது.  பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நீண்ட காலம் சுமங்கலியாக இருக்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் இதற்கு ஆதாரம் இல்லை. சுக்கிரனின் அம்சமாக திகழும் பூராடம் நட்சத்திரக்காரர்கள் தனுசு ராசியைக் கொண்டிருப்பார்கள்.

பூராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சூரியனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள்.  தன்னம்பிக்கை மிகுந்த நீங்கள் செய்வதெல் லாம் சரி என்று நினைக்ககூடியவர்கள். அரைகுறை வேலைகளை விரும்பமாட் டீர்கள். பிறருக்கு கருத்து சொல்வதை விரும்புவீர்கள். குடும்பத்தோடு பற்று கொண்ட நீங்கள்   ஆன்மிக சிந்தனையையும் கொண்டிருப்பீர்கள். உழைப்பதில் குறைவைக்கமாட்டீர்கள்.

பூராடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள்  புதனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். கடவுள் மீது பக்தி கொண்டு தானம் தர்மம் செய்வதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள்.  பிறரை வசீகரிக்கும் தோற்றத் தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள். பிடிவாத குணமும் எதையும் சாதிக்கும் குணமும் உங்களிடம் இயல்பாகவே இருக்கும். செய்வதை திருந்தச் செய் என்பதை கடைப்பிடிப்பவர்கள் நீங்கள்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்வந்தாலும் தற்பெருமையும் கொஞ்சம் கொண்டிருப்பீர்கள்.

பூராடம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள்  சுக்கிரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். இரண்டு குணங்களும் உங்களிடம் இயல்பாகவே இருக்கும். கோபங்கள் அதிகமிருந்தாலும் நல்ல குணங்களையும் கொண்டிருப்பீர்கள்.  எதையும் எச்சரிக்கையுடன் கவனமாக கையாளுவீர்கள். எளிமையான தோற்றத்தையே விரும்புவீர்கள். கொள்கையில் உயர்ந்தவற்றை கொண்டிருப்பீர்கள். மற்றவர்களின் வார்த்தைக்கு   மதிப்பளிப்பீர்கள்.

பூராடம் நட்சத்திரத்தின்  நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் செவ் வாயை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். எப்போதும் ஒருவித பரபரப்புடன் இருப்பீர்கள். நட்பு வட்டத்தை சுருக்கி கொள்வதிலும் உங்கள் தனித்தன்மையை நிரூபிப்பதிலும் கவனமாக இருப்பீர்கள்.  உங்களுக்கு வேண்டியது  கிடைக்க சுய நலமாகவும் நடந்துகொள்வீர்கள்.  இக்குறையைத் தவிர்த்தால் வாழ்வில் மேலும் உயர்ந்த நிலைகளை அடைவீர்கள்.

பூராடம் நட்சத்திரத்தைக் கொண்டிருப்பவர்கள் அறிவுக்கூர்மையுள்ளவர் களாக இருப்பீர்கள். கேட்டதும் கற்றதும் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் கற்பூர புத்தியைக் கொண்டவர்களாக திகழ்வீர்கள்.  பொறுமையாக இருந்து சாதிக்கும் குணத்தைக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் முன் கோபத்தையும் கொண்டி ருப்பார்கள். திட்டமிட்டு வெற்றி பெறுவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். ஆடை, அணிகலன்களை விரும்புபவர்களாக இருப்பீர்கள். பணிபுரியும் இடத்திலும்,    சொந்த தொழில் புரிந்தாலும்  இருக்கும் இடத்தை வெற்றி பெற போராடுவீர்கள்.

Sharing is caring!