பூலோகத்தை விட கைலாயத்தில் தான் அதிக சந்தோஷம் !

வாழ்க்கையின் நோக்கம் நல்லவனாக இருந்து மீண்டும் இப்பிறவி உண்டாகக் கூடாது என்று இறைவனை வழிபடுவதில் அடங்கியிருக்கிறது.  பூலோகத்தில் இருக்கும் சுகபோகங்களை விட வைகுண்டத்திலும் கயிலாயத்திலும் அதிகமான சுகங்களை அடையலாம் என்பதை மனிதப்பிறவிகள் அனைவரும் மனதில் கொள்வதில்லை.

இதற்கு சுலபமான வழி  பகவான் நாமாவை உச்சரிப்பது மட்டுமே…  அரிசி வாங்கணுமே ஒரு பையைக் கொண்டு வாயேன் என்றார் ஒருவர். அந்நேரம் பார்த்து அவருக்கு  மாரடைப்பு வந்து கீழே விழுந்துவிட்டார். அவரது ஆன்மாவை அழைத்துச்செல்ல..  வைகுண்டத்திலிருந்து விஷ்ணு தூதர்களும், கயிலாயத்தி லிருந்து சிவதூதர்களும் வந்துவிட்டார்கள்.. யார் அழைத்துச் செல்வது என்பதில் இருவருக்கும் போட்டி நிலவியது..

நாங்கள்தான் அழைத்துச் செல்வோம் என்று  இருதரப்பினரும் வாதிட்டார்கள். விஷ்ணுதூதர்களும் அரி  ((அரி)சி வாங்கணுமே )என்று  விஷ்ணுவை அழைத்த பிறகு உயிர் நீத்ததால் அவர் வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்வதுதான் முறை என்று கூறினார்கள்.. ஆனால்  சிவதூதர்களும் மறுத்து பேசினார்கள். இல்லை இல்லை (அரி(சிவா)ங்கணுமே) என்று சிவனைத்தான் அழைத்தார் அதனால்  அவரை கயிலாயத்துக்குத்தான் அழைத்துச்செல்ல வேண்டும் என்று வாதிட்டார் கள்.. நமக்குள் சச்சரவு வேண்டாம் எமதர்மராஜனை கேட்போம் என்று சென்றார் கள்..

இறந்த ஆன்மாவைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் உரிய இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவன் மீண்டும் உயிர்த்தெழுந்துவிடு வான்… என்பது  எமதர்மனின் கணக்கு. அதனால்  விஷ்ணு தூதர்களும் சிவதூதர் களும் நீண்ட நேரம் வாதத்தில் ஈடுபடவே இறந்தவனின் ஆன்மா மீண்டும் அவன் உடலுக்குள் பிரவேசித்தது. நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அவன் அப்போதுதான் இறைவனை உணர ஆரம்பித்தான்..

இறைநாமம் சொல்லாத நேரத்தில் வார்த்தையில் இருந்த அரி ,சிவா  என்னும் இறைநாமமே நம்மை மீண்டும் பூலோகத்துக்குள்  அனுப்பியிருக்கிறது. இனி இருக்கும் காலம் வரை அரி, சிவா என்னும் நாமத்தை இடைவிடாது  சொல்ல வேண்டும்.. என்று நினைத்தபடி அரிசி வாங்கணுமே என்று கடைக்கு ஓடினான்.  எமதர்மனிடம்  சென்ற  விஷ்ணு, சிவத்தூதர்கள் எமனைக் காணாமல் திரும்பி னார்கள்.  இறந்து கிடந்தவனின் பூத உடலை தேடினார்கள். ஆனால் வழியில் தடுத்த எமதர்மன் அவனுக்கு மீண்டும் பூலோகத்தில் வசிக்க காலம் ஒதுக்கியதை தெரிவித்தார்.

பூலோகத்தில் இறைநாமம் சொல்லியவன்  இறுதிக்காலத்துக்குப் பிறகு  வைகுண்டத்திலும், கயிலாயத்திலும் சுகபோகமாக  கழித்தான்.

Sharing is caring!