பெண்களின் முந்தானைக்கும், லட்சுமி கடாக்ஷத்திற்கும் சம்பந்தம் உண்டு தெரியுமா?

நம் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் செழிக்கவும், செல்வத்திற்கு அதிபதியாம் லட்சுமி தேவி நிரந்தரமாக குடியிருக்க, கீழ்கண்டவற்றை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும்.

நமது வீட்டிற்கு வரும், பெண்களுக்கு யாராக இருந்தாலும் அவர்களுக்கு குடிக்க நீர் கொடுக்க வேண்டும். எந்த பெண் வடிவிலும் லட்சுமி தேவியே நம் வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.  பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து, பண வரவு  ஏற்படும்.

ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக்குழிக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்கக் கூடாது.. அது எப்போதும் கழுத்தில் இருக்கலாம்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

ருத்திராட்சம், துளசி மணி, ஸ்படிகம் போன்ற மாலைகளை ஜபம் ஹோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அணியக் கூடாது.

வீட்டில் மாலை விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.

Sharing is caring!