பெண்கள் திருமணமும் செவ்வாயும்

ஜோதிடத்தில் கணவனை பற்றி கூறும் கிரகம் செவ்வாயாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்து அந்த பெண்ணுக்கு வரப்போகும் கணவனின் தன்மையை கூறலாம் என்கிறது ஜோதிடம்.

1. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் லக்னத்தில் இருந்தால் அந்த பெண் தன் கணவனை மிகவும் நேசிப்பாள். கணவன் ஒரு சிறந்த ஆண்மகனாக விளங்குவான். திருமணம் நல்லமுறையில் பெற்றாரால் பார்த்த மணமகனுக்கு நடத்திவைக்கப்படும். சொந்தமில்லை என்றாலும் அன்னியோன்னியம் மிகுந்திருக்கும்.

2. ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் இரண்டாம் பாவத்தில் நின்றால் குடும்ப வழக்கத்திற்க்கு மாறான காதல் திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நிலை அன்பானதாக இருந்தாலும் நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. கணவன் உறவினராக இருக்ககூடும்.

3. ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு மூன்றாம் பாவத்தில் நின்றால் காலதாமதமான திருமணம் நடைபெறும். உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் வழியில் கணவர் அமைவார். சனியும் சேர்க்கை பெற்றால் பெண்ணை உறவினர்கள் பழிப்பார்கள்.

4. ஜாதகத்தில் செவ்வாய் அல்லது ஏழாமதிபதி லக்னத்திற்கு நான்கில் நின்றால் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு அமையும். சனி ராகுவுடன் சேர்க்கை பெற்றால் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரை கணவனாக அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை அமையும்.

5. ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் நின்றால் சிறந்த குடும்பத்திலிருந்து நன்கு கற்ற ஆடவனை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்க மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும்.

6. ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஆறாம் பாவத்தில் நின்றால் அந்த பெண்ணே தேர்ந்தெடுத்த வரனை கணவனாக அடைவாள். கணவனை அந்த பெண் மிகவும் நேசிப்பாள். ஆனாலும் கணவனால் பல துன்பங்களை அடைந்து மகிழ்ச்சியற்ற நிலை ஏற்படும்.

7. ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஏழாமிடத்தில் இருப்பது காதல் திருமணத்தை குறிக்கும் அமைப்பாகும். குரு அல்லது புதன் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டால் பெற்றோரால் அங்கிகரிக்கப்பட்டு மகிழ்சியான திருமணம் அமையும். கணவன் அன்பானவராக அமைவார். குரு/புதன் சேர்க்கை பெறவில்லை என்றால் குறைந்தவயதிலேயே திருமணம் நடைபெற்று கணவனுடன் மகிழ்சியான வாழ்க்கை ஏற்படும்.

8. ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் எட்டாம் பாவத்தில் நின்றால் அந்த பெண்ணே தேர்ந்தெடுத்த மகிழ்சியற்ற திருமண வாழ்க்கை அமையும். காலதாமதமான திருமணம் நடைபெருவதோடு முறையற்ற வகையில் கணவனை அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை ஏற்படும். கணவன் குடிகாரனாக பல தீய பழக்கங்களோடு அமைவதெல்லாம் இந்த அமைப்பில்தான் ஏற்படும். அவசர அவசரமாக திருமணம் செய்து நிதானமாக துக்கம் அனுபவிக்கும் நிலையாகும்.

9. ஜாதகத்தின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதில் இருப்பது உன்னதமான அமைப்பாகும். சிறந்த கணவனை அடைந்து மகிழ்சியான வாழ்க்கை ஏற்படும். திருமணத்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

10. ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பத்தாமிடத்தில் நின்றால் உடன் பணிபுரியும் ஆண்மகனை அந்த பெண்ணே தேர்ந்தெடுத்து திருமணம் செய்து மகிழ்சியான வாழ்வு அமையும். கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பார்.

11. ஜாதகத்தின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பதினோரமிடத்தில் இருக்க குடும்ப உறவினரில் கணவன் அமையப்பெற்று பொன் பொருள் மற்றும் பல லாப அமைப்புகளை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

12. ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பன்னிரெண்டில் நிற்க தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட முறையற்ற சமுதாயத்திற்கு புறம்பான திருமண வாழ்க்கை அமையும். குருபார்வை பெற்றால் பெற்றோர் ஆதரவு உண்டு. என்றாலும் கணவனால் படுக்கை சுகத்திறக்காக படாதபாடு படுத்தப்பட்டு மகிழ்ச்சியற்ற நிலையில் பிரிந்து வாழவோ அல்லது கணவனை இழந்து வாழவோ நேரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

Sharing is caring!