பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை முட்டைகோஸ் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை முட்டைகோஸ் என்றாலே போதும் சிலர் அதனை ஒரமாக ஒதுக்கி வைப்பார்கள்.

ஆனால் முட்டைகோஸில் பல வகையான சத்துக்களை உடலுக்கு வழங்குகின்றது.

குறிப்பாக முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி, விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள் உடம்பின் உணர்வுகளுக்கும், உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது.

இது உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது.

முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில்தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. இது பலவகையான நோய்களுக்கு தீர்வளிக்கின்றது.

அந்தவகையில் முட்டைகோஸ் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • முட்டைகோஸ் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது குறையும்.
  • முட்டைகோஸில் உள்ள சல்பர், மற்றும் அயோடின் ஆகியவை வயிறு, குடல் மற்றும் குடற்சவ்வு போன்ற உறுப்புகளை சுத்தப்படுதுகின்றன.
  • முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது.
  • உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டைகோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.
  • வயிற்று புண் உள்ளவர்கள் முட்டைகோஸ் சாற்றை நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
  • பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
  • முட்டைகோஸில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. கண் நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.
  • முட்டைகோஸ் நரம்புகளுக்கு வலு கொடுக்கும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
  • முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

Sharing is caring!