பேரிச்சம்பழத்தில் இவ்வளவு நன்மையா??

பேரிச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் 2 முதல் 3 பேரிச்சம் பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் இது தடுக்கும். மேலும் உங்கள் உடலில் இருக்கும் இரத்தத்தின் உற்பத்தியினை இது அதிகரிக்க செய்யும்.

தினமும் பாலில் 4 பேரிச்சம் பழங்களை ஊறவைத்து காலை மற்றும் மாலை என இரு வேலையும் உண்டு வந்தால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும்.

பேரிச்சம் பழத்தில் கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வரும்பொழுது உங்களுக்கு கூர்மையான கண் பார்வை கிடைக்கும். மேலும் உங்களுக்கு கண்களில் கோளாறு ஏற்படாமல் காக்க உதவும்.

முடி பிரச்னை:

முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். பேரிச்சம் பழத்தில் உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான ப்ரோடீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக ஏற்படாமல் தடுக்கும்.

இனவிருத்தி:

ஆண்கள் தினமும் பேரிச்சம் பழத்தினை உண்டு வந்தால் அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகின்றது

 செரிமானம் சீராகும்:

பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

சிறந்த ஆற்றல் கிடைக்கும்:

பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

Sharing is caring!