போதை தெளிய மாத்திரை

மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை.

போதை மருந்து மற்றும் மது ஆகியவற்றுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்பது, சற்று கடினம்.

இந்த பழக்கத்துக்கு ஆளானவர்களை, அதிலிருந்து மீட்க, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.

ஒவ்வொருவருக்குமே, தங்களின் உடலுக்கு புத்துணர்வு அளிக்கும், “எண்டோர்பின்’ என்ற ஹார்மோன் உள்ளது.

போதை மருந்து, மது, செக்ஸ் போன்ற பழக்கங் களுக்கு அடிமையாகிப் போனவர்களுக்கு, இந்த ஹார்மோன்கள் சுரப்பது, குறைந்து, படிப்படியாக நின்று விடும்.

இதனால், போதை மருந்தை பயன்படுத்துவது, மது குடிப்பது போன்றவற்றால் மட்டும் தான், நமக்கு புத்துணர்ச்சி அல்லது இன்பம் கிடைக்கும் என இந்த பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவர்கள் நினைக்கத் துவங்கி விடுகின்றனர்.

இதனால் உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.

போதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது.

உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது.

மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது.

உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.

இதனை தொடர்ந்து செயலில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல் போன்றவை ஏற்படுகின்றன.

அதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும்.

இன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையானவார்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது குடியை சிறுக சிறுக மறக்கடிக்கும் வகையிலான மாத்திரை சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இது பேரிட்சை மற்றும் சிக்கரி கலந்த கலவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதனால் எந்த வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடி பழக்கத்திற்கு ஆளானர்களை உடனடியாக சாதாரண நிலைக்கு கொண்டு வர இந்த மாத்திரை உதவும் என்றும், குடித்த பிறகு ஏற்படும் தலைவலி, வயிறு உப்பசம், வாந்தி வரும் உணர்வு போன்றவற்றையும் இது கட்டுப்படுத்துகிறது.

விழா காலங்களிலும், நல்ல காரியங்களிலும் குடித்து விட்டு நிலை தடுமாறும் பலருக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Sharing is caring!