போராடி சாதிக்கும் மூல நட்சத்திரம்

கேதுவின் ஆதிக்கத்தில் வரும் மூன்றாவது நட்சத்திரம் மூலநட்சத்திரம். கேட்டை போன்றுதான் இதுவும்  ஆண்மூலம் அரசாளும்.. பெண் மூலம் நிர்மூலம் என்பதும்.. இதுவும் உண்மை இல்லை. 27 நட்சத்திரங்களின் வரிசையில் 19 இடத்தைப் பெற்றிருக்கும் இந்த மூல நட்சத்திரம். ஸ்ரீ இராமனின் பக்தனான ஆஞ்சநேயனின்  ஜென்ம நட்சத்திரம் இது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனுசு  ராசியைக் கொண்டிருப்பார்கள். இந்நட்சத்திரம் சிங்கத்தைப் போன்று ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.

மூல நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் செவ்வாயை அம்சமாக கொண்டிருப்பீர்கள். எல்லோரிடமும் பாசமாக இருப்பீர் கள்.  யாரிடமும்  எளிதில் வாக்கு கொடுக்க மாட்டீர்கள். அப்படி கொடுத்தால் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி விடுவீர்கள்.  இயல்பிலேயே கோப உணர்ச்சியை அதிகம்  கொண்டிருப்பீர்கள்.  இதனாலேயே சட்டென்று உணர்ச்சிவசப்படுவீர் கள்.  சுயகெளரவம் பார்ப்பீர்கள்.

மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். சுற்றமும் சூழமும்  கெளரவமாக வாழ விரும்புவீர்கள்.  எல்லோரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அனைத்து வசதி வாய்ப்புகளையும் இள வயதிலேயே பெற்று மகிழ்வீர்கள். இறை நம்பிக்கை அதி கம் கொண்டவர்களான நீங்கள் கலைத்துறையில் இருந்தால் விரைவில் வெற்றி பெறுவீர்கள். பிரச்னைகளை கண்டு அஞ்சாமல் எதிர்கொள்ளும் திறமையை பெற்றிருப்பீர்கள்.

மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் புதனை அம்சமாக கொண்டிருப்பதால் அறிவாளியாக திகழ்வீர்கள். இறைபக்தி யில் நாட்டமும், இறைப்பணியில் ஈடுபாடும் கொண்டிருப்பீர்கள். அச்சம் என்பதை உணராதவர்களான நீங்கள் எதைத் தொட்டாலும் வெற்றி பெறும் வரை ஓய மாட்டீர்கள். எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய நினைப்பீர்கள். கொஞ்சம் முன்கோபியாக இருந்தாலும் குணத்தில் சிறந்தவர்களாக இருப்பீர்கள்.

மூல நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சந்திரனை  அதிபதியாக கொண்டிருப்பீர்கள். குடும்பத்திலும் உறவுகளிலும் உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. தலைமை தாங்கும் குணத்தைக் கொண்டு  பணியிடத் திலும் சிறப்பாக ஆட்சி புரிவீர்கள். குழந்தைகள் விரும்பும் வகையில் அவர்களது ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.  எங்கும் முதன்மையாக இருப்பீர்கள்.

மூலநட்சத்திரத்தை  கொண்டவர்கள்  நேர்வழியில்  நடப்பவர்கள் என்பதால்  சற்று கர்வத்தோடு நடமாடுவார்கள். போராட்டம் அடைந்து தீர வேண்டும் என்னும் விஷயங்களுக்கு  தயங்காமல் போராடி வென்று சாதிப்பீர்கள். இறை நம்பிக்கை யும் இறை சிந்தனையும் கொண்டு இருப்பதால் தர்மம் செய்வதிலும் விருப்ப முற்று  இருப்பீர்கள். குடும்பத்தில் பாசம், நட்பில் மரியாதை, சமூகத்தில் உயர்ந்த தோற்றம் கொண்டு சிறப்பான வாழ்க்கை வாழ்வீர்கள்.

Sharing is caring!